எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோபன்ஹேகன், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டென்மார்கில் உள்ள பிரபல பொழுதுபோக்கு பூங்கா விழாக்கோலம் பூண்டுள்ளது.
டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலாகலமாக கொண்டாட பல்வேறு நாடுகள் தயாராகி வருகின்றன. டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் உள்ள பிரபலமான பொழுதுபோக்கு பூங்காவான டிவோலி கார்டன்ஸ் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி விழாக்கோலம் பூண்டுள்ளது.
ஆயிரக்கணக்கான மின் விளக்குகளை கொண்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளதால் பூங்கா வளாகம் முழுவதும் ஒளி வண்ணத்தில் மிளிர்கிறது. குடும்பம், குடும்பமாக டிவோலி பொழுதுபோக்கு பூங்காவுக்கு வரும் மக்கள் ராட்சத ராட்டினம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட சவரிகளில் பயணித்து மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுகின்றனர்.
பனி சறுக்கு சாகச விரும்பிகளுக்காக பூங்காவில் ஒரு செயற்கை பனிச்சறுக்கு தளம் மற்றும் கிறிஸ்துமஸ் தாத்தா இல்லம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி தொடங்கப்பட்டுள்ள சிறப்பு சந்தையில் இருந்து ஏராளமானோர் பண்டிகை கால பொருட்களை ஆர்வத்துடன் வீடுகளுக்கு வாங்கி செல்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


