முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிச. முதல் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2,500 உதவி தொகை வழங்கப்படும் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 29 நவம்பர் 2024      இந்தியா
Hemanath 2024-11-29

Source: provided

 

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் அடுத்த மாதம் முதல்  பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித் தொகையாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.  

ஜார்கண்ட் மாநிலத்தில் 18 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதி உதவியை ஹேமந்த் சோரன் அரசு வழங்கி வந்தது. சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக  நேற்று முன்தினம் பதவி ஏற்றார்.

பதவி ஏற்புக்கு பின்னர் ஹேமந்த் சோரன் நிருபர்களிடம் கூறுகையில், ஜார்கண்ட் மாநிலத்தில் அடுத்த மாதம் முதல் (டிசம்பர்) பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகையாக வழங்கப்படும் என்றார். பின்னர் இது தொடர்பான முடிவு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

49 வயதான ஹேமந்த் சோரன் ஜார்கண்டின் முதல்வராக பதவியேற்பது இது 4-வது முறையாகும். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பர்ஹைட் தொகுதியில் போட்டியிட்டிருந்த அவர் 39 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து