எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை: வாக்குப்பதிவு எண்ணிக்கையில் வித்தியாசங்கள் இருப்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என சரத் பவார் தெரிவித்துள்ளார்
மராட்டிய மாநில தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த பின்னர் வெளியான தகவல்களின்படி, வாக்குப்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 7.83 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இது குறித்து உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திற்கு மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே கடிதம் எழுதினார்.
மேலும், வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து பாய் ஜக்தாப் உள்ளிட்ட பல்வேறு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், வாக்குப்பதிவு எண்ணிக்கையில் வித்தியாசங்கள் இருப்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் தற்போது இல்லை என தேசியவாத காங்கிரஸ்(சரத்சந்திர பவார்) கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையில் வேறுபாடுகள் இருப்பதாக கூறப்பட்டாலும், தற்போது அதனை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை.
சிலர் மறுவாக்கு எண்ணிக்கை வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை நிச்சயம் மேற்கொள்ள வேண்டும்.
எனக்கு இதில் பெரிய அளவில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு சரத் பவார் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


