எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வுக்கான கால அட்டவணையை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு வருகிற 9-ம் தேதி (திங்கட்கிழமை) முதல் 23-ம் தேதி (திங்கட்கிழமை) வரை நடக்கும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது.
இதில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புக்கு வருகிற 16-ம் தேதி முதல் 23-ம் தேதி வரையிலும், 6 முதல் 12-ம் வகுப்பு வரை 9-ம் தேதி முதல் 23-ம் தேதி வரையிலும் தேர்வு நடக்கிறது. தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட போது, 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் முழு அட்டவணை வெளியிடப்பட்டது.
தற்போது 6 முதல் 9-ம் வகுப்பு வரை மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கும் தேர்வுக்கான முழு அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, 6 முதல் 9-ம் வகுப்பு வரைக்கும் 9-ம் தேதி தமிழ், 10-ம் தேதி(செவ்வாய்க்கிழமை) விருப்ப மொழி, 12-ம் தேதி (வியாழக்கிழமை) ஆங்கிலம், 16-ம் தேதி(திங்கட்கிழமை) கணிதம், 18-ம் தேதி (புதன் கிழமை) உடற்கல்வி, 20-ம் தேதி(வெள்ளிக் கிழமை) அறிவியல், 23-ம் தேதி(திங்கட்கிழமை) சமூக அறிவியல் தேர்வும் நடக்க உள்ளது.
இதில் 6-ம் வகுப்புக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், 7-ம் வகுப்புக்கு பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும், 8-ம் வகுப்புக்கு 10 மணி முதல் 12.30 மணி வரையிலும், 9-ம் வகுப்புக்கு பிற்பகல் 2 மணி முதல் 4.30 மணி வரையிலும் தேர்வுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
10-ம் வகுப்புக்கு 10-ம் தேதி தமிழ், 11-ம் தேதி(புதன்கிழமை) விருப்ப மொழி, 12-ம் தேதி ஆங்கிலம், 16-ம் தேதி கணிதம், 19-ம் தேதி(வியாழக்கிழமை) அறிவியல், 23-ம் தேதி சமூக அறிவியல் தேர்வும் காலை 9.45 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையிலும் நடைபெற இருக்கிறது.
பிளஸ்-1 வகுப்புக்கு 9-ம் தேதி தமிழ், 10-ம் தேதி ஆங்கிலம், 12-ம் தேதி கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல் உள்ளிட்ட சில பாடங்களுக்கும், 16-ம் தேதி உயிரியியல், தாவரவியல், வரலாறு உள்ளிட்ட சில பாடங்களுக்கும், 18-ம் தேதி வேதியியல், கணக்கு பதிவியியல், புவியியல், 20-ம் தேதி இயற்பியல், பொருளியல், 23-ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல் உள்ளிட்ட சில பாடங்களுக்கும் தேர்வு நடக்கிறது.
10-ம் வகுப்புக்கு 9-ம் தேதி தமிழ், 10-ம் தேதி ஆங்கிலம், 12-ம் தேதி கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல் உள்ளிட்ட சில பாடங்களுக்கும், 16-ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல் உள்ளிட்ட சில பாடங்களுக்கும், 18-ம் தேதி உயிரியியல், தாவரவியல், வரலாறு உள்ளிட்ட சில பாடங்களுக்கும், 20-ம் தேதி வேதியியல், கணக்கு பதிவியியல், புவியியல், 23-ம் தேதி இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்பு திறன்கள் தேர்வும் நடக்க உள்ளது. இந்த தேர்வுகள் காலை 9.45 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடக்கிறது. இவ்வாறு பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


