Idhayam Matrimony

சென்னையில் தொடரும் கனமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து துணை முதல்வர் உதயநிதி நேரில் ஆய்வு

சனிக்கிழமை, 30 நவம்பர் 2024      தமிழகம்
Udayanidhi 2024-11-30

சென்னை, தொடரும் கனமழையை அடுத்து எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி நேரில் ஆய்வு செய்தார்.

வங்கக்கடலில் நேற்று உருவான பெஞ்சல் புயல், காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே நேற்று(சனிக்கிழமை) மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது . மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் ஓட்டல்கள், கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மழை நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார் . அப்போது அமைச்சர் சேகர் பாபு,மேயர் பிரியா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து