முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1.17பில்லியன் டாலர் மதிப்பீட்டில் இந்தியாவிற்கு ஹெலிகாப்டர் உபகரணங்கள் வழங்க அதிபர் பைடன் நிர்வாகம் ஒப்புதல்

புதன்கிழமை, 4 டிசம்பர் 2024      உலகம்
Biden 2024-12-04

Source: provided

வாஷிங்டன்: 1.17பில்லியன் டாலர் மதிப்பீட்டில் இந்தியாவிற்கு மல்டி மிஷன் ஹெலிகாப்டர் உபகரணங்களை வழங்குவதற்கு அதிபர் பைடன் நிர்வாகம் ஒப்புதல்அளித்துள்ளது.

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் ஜனவரி மாதம் 20-ம் தேதி பதவியேற்கிறார். இதனிடையே தற்போதைய அதிபர் பைடன் நிர்வாகத்தில் முக்கிய பாதுகாப்பு உபகரணங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்வதற்கான நான்கு ஆண்டு கால ஒப்பந்தம் முடிவடைய சில வாரங்களே உள்ளன. 

இந்நிலையில் இந்தியாவிற்கு மல்டி மிஷன் ஹெலிகாப்டர் உபகரணங்களை வழங்குவதற்கு அதிபர் பைடன் நிர்வாகம் ஒப்புதல்அளித்துள்ளது. இதன்படி 1.17பில்லியன் டாலர் மதிப்பீட்டிலான இந்த உபகரணங்களில் 30 பல்திறன் தகவல் விநியோக அமைப்பு, வானொலி அமைப்புக்கள் உள்ளிட்டவற்றை இந்தியா கோரியுள்ளது. 

இந்த விற்பனை மூலமாக நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை தடுக்கும் இந்தியாவின் திறன் மேலும் வலுப்படும் என்று அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து