முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹரித்துவாரில் கங்கை நீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

புதன்கிழமை, 4 டிசம்பர் 2024      இந்தியா
Gangai 2024-12-04

Source: provided

டேராடூன்: ஹரித்துவாரில் கங்கை நீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஒவ்வொரு மாதமும் உத்தரபிரதேச எல்லை அருகே ஹரித்துவாரை சுற்றியுள்ள சுமார் 8 இடங்களில் கங்கை நீர் பரிசோதனை செய்யப்படுகிறது.

இதன்படி நதி நீர் 'ஏ' முதல் 'ஈ' வரை 5 வகைகளாக பிரிக்கப்படுகிறது. அதாவது 'ஏ' என்றால் மிக குறைந்த நச்சுத்தன்மை கொண்டது. அந்த தண்ணீரை கிருமி நீக்கம் செய்த பிறகு குடிநீராக பயன்படுத்தலாம். அதே சமயம் 'ஈ' என்றால் அதிக நச்சுத்தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில் நவம்பர் மாதத்திற்கான சமீபத்திய சோதனையில் கங்கை நதி நீர் 'பி' வகையாக இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் ஹரித்துவாரில் கங்கை நதி குடிப்பதற்கு உகந்தது அல்ல என்று தெரியவந்துள்ளது. அதே சமயம், அந்த நீர் குளிப்பதற்கு ஏற்றது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து