எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : பிங்க் பந்து கிரிக்கெட்டில் இந்திய அணி படைத்த சாதனைகள் குறித்து விரிவாக பார்ப்போம்.
2015-ல் அறிமுகம்...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பகல்- இரவு டெஸ்ட் போட்டிகளை பிரபலமாக்கும் நோக்கில் 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. மேலும், பகல்- இரவு டெஸ்ட் போட்டிக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பிங்க் நிறப் பந்துகள் பயன்படுத்தப்பட்டன. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் தொடர் ஆஸ்திரேலியாவில் உள்ள பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது.
அடிலெய்டில் நாளை...
பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றிபெற்று சாதனை படைத்தது. இவ்விரு அணிகளும் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி நாளை (டிசம்பர் 6-ம் தேதி) அடிலெய்ட் மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இந்திய அணி இதுவரை 4 பகல் இரவு ஆட்டங்களில் விளையாடியிருக்கிறது. அதில், 3-ல் வெற்றியும், அடிலெய்ட்டில் ஒரு தோல்வியையும் சந்தித்துள்ளது. வங்கதேசம், இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றிருக்கிறது. இந்திய அணிக்காக விராட் கோலி மட்டும் 4 பகல் - இரவு போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
இந்தியா விளையாடிய பகல் - இரவு ஆட்டங்களின் முடிவுகள்
1) இந்தியா - வங்கதேசம் (இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்களில் வெற்றி) -2019(கொல்கத்தா).
2) இந்தியா - ஆஸ்திரேலியா (8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி) 2020(அடிலெய்ட்).
3) இந்தியா - இங்கிலாந்து (10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி)2021 (அஹமதாபாத்).
4) இந்தியா - இலங்கை(238 ரன்களில் வெற்றி) 2022.
பகல் - இரவு போட்டிகளில் அதிக ரன்கள் விளாசியவர்கள்
1) விராட் கோலி- 277 ரன்கள் (4 போட்டிகள்).
2) ரோஹித் சர்மா- 173 ரன்கள் (3 போட்டிகள்).
3) ஸ்ரேயாஸ் ஐயர்- 155 ரன்கள் (1 போட்டிகள்).
பகல் - இரவு போட்டிகளில் அதிக விக்கெட்கள்
1) ரவிச்சந்திரன் அஸ்வின் - 18 விக்கெட்டுகள் (4 போட்டிகள்).
2) அக்ஷர் பட்டேல்- 14 விக்கெட்டுகள் (2 போட்டிகள்).
3) உமேஷ் யாதவ்- 11 விக்கெட்டுகள் (2 போட்டிகள்).
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


