முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களவையில் காங்.,எம்.பி அபிஷேக் சிங்வியின் இருக்கைக்கு அடியில் பணக்கட்டு கண்டுபிடிப்பு விசாரணை நடத்த அவை தலைவர் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2024      இந்தியா
Abisheck-singh 2024-12-06

Source: provided

புது டெல்லி: மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் மனு சிங்வி இருக்கைக்கு கீழே பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து விசாரணை நடத்த அவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் உத்தரவிட்டுள்ளார். 

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் தினமும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. அதானி விவகாரம் உள்பட பல்வேறு முக்கிய பிரச்சினைகளை விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுகின்றன. 

இந்த நிலையில், மாநிலங்களவையில், காங்கிரஸ் எம்.பி அபிஷேக் மனு சிங்வி இருக்கைக்கு கீழே பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் பரபரப்பு   புகாரை முன்வைத்துள்ளார்.  

நேற்று முன்தினம் அவை நடவடிக்கைகள் முடிந்த பிறகு நடைபெற்ற சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும், இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். 

ஆனால் இந்த குற்றச்சாட்டை அபிஷேக் சிங்வி திட்டவட்டமாக மறுத்து உள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறும் போது, 

இது போன்ற  குற்றச்சாட்டை இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. முதன்முறையாக கேள்விப்படுகிறேன். நான் நேற்று முன்தினம் மேல்சபைக்கு செல்லும் போது ஒரு 500 ரூபாய் நோட்டை மட்டுமே எடுத்துச் சென்றேன். 

மதியம் 12:57 மணிக்கு பாராளுமன்றத்தை அடைந்தேன். ஒரு மணிக்கு  அவைக்கு சென்றேன். பின்னர் 1.30 மணி வரை கேண்டீனில் அமர்ந்திருந்தேன். நேற்று முன்தினம் நான் பாராளுமன்றத்தில் இருந்த நேரம் 3 நிமிடங்கள்தான். கேண்டீனில் அமர்ந்திருந்தது 30 நிமிடங்கள். 

இது போன்ற விஷயங்களில் கூட அரசியல் எழுப்பப்படுவது எனக்கு வினோதமாக இருக்கிறது. எந்த இருக்கையிலும் எதையும் வேறு யாராவது வைக்கலாம் என்ற ரீதியிலும்  விசாரணை இருக்க வேண்டும். 

இருக்கையைப் பூட்டி, சாவியை எம்.பி.யால் வீட்டிற்கு எடுத்துச் செல்லக் கூடிய இருக்கை இருக்க வேண்டும். மேலும் பாதுகாப்பு நிறுவனங்களில் ஏதேனும் தவறு இருந்தால் அதுவும் முழுமையாக அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து