முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-59 செயற்கைக்கோள் பிரிக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட இஸ்ரோ

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2024      இந்தியா
ISRO 2024-12-08

Source: provided

ஸ்ரீஹரிகோட்டா : பி.எஸ்.எல்.வி. சி-59 மிஷனின் வெற்றிகரமான லிப்ட் ஆப் மற்றும் செயற்கைக்கோள் பிரிக்கப்பட்ட வீடியோவை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் புரோபா-3 என்று பெயரிடப்பட்ட இணை செயற்கைகோளை (2 செயற்கைகோள்கள்) உருவாக்கி இருந்தது. இந்த செயற்கைகோள்கள் சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

550 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ஏவுதளமான, ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த 04-ம் தேதி  மாலை 4.08-க்கு மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த சூழலில் பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் ஏவுதல் மறுநாள் 05-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.புரோபா-3 செயற்கைக்கோளில் கடைசி நேரத்தில் கண்டறியப்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ராக்கெட் ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் அது சரிசெய்யப்பட்டு கடந்த 05-ம் தேதி  மாலை 4.04 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இந்நிலையில் தற்போது பி.எஸ்.எல்.வி. சி-59 மிஷனின் வெற்றிகரமான லிப்ட் ஆப் மற்றும் செயற்கைக்கோள் பிரிக்கப்பட்ட வீடியோவை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து