எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி பேரணி நடத்திய விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதால் எல்லையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 2020-ம் ஆண்டு மூன்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து 2021-ல் 3 புதிய வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற்றது.
மேலும் விவசாயிகளின் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக மத்திய அரசு அறிவித்தது. எனினும் இன்னும் அதற்கு தீர்வு காணப்படவில்லை. இதனை வலியுறுத்தி விவசாயிகள் மீண்டும் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர்.
டெல்லியிலே முகாமிட்டு விவசாயிகள் போராட்டத்தைத் தொடர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் படி உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா எல்லையில் அரியானா, பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த சில தினங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் இதில் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் கடந்த 6-ம் தேதி டெல்லி செல்ல முற்பட்ட அவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தினர். அப்போது நடந்த போராட்டத்தில் போலீசார் தாக்கியதில் விவசாயிகள் சிலர் காயமடைந்தனர்.
டெல்லி எல்லையில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் நேற்று அரியானா மாநிலம் அம்பாலா பகுதியில் உள்ள ஷம்பு எல்லையில் இருந்து டெல்லி நோக்கி பேரணி செல்ல இருந்தனர். விவசாயிகள் பேரணி அறிவிப்பைத் தொடர்ந்து டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஷம்பு எல்லையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, சாலைகளில் ஆணிகள் பொருத்தப்பட்டு, விவாசாயிகளின் வாகனங்கள் கடக்க முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அங்கு போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
அரியானா, பஞ்சாப் எல்லைகளிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில் அரியானா மற்றும் பஞ்சாப் இடையேயான ஷம்பு எல்லையில் டெல்லியை நோக்கிச் செல்வதைத் தடுக்க போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி அவர்களை கலைத்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது.
முன்னதாக கண்ணீர் புகை குண்டுகளில் இருந்து தப்பும் வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக விவசாயிகள் முகக்கவசம் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


