எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ராமேஸ்வரம் : தமிழக மீனவர்கள் 8 பேரை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
ராமேசுவரம் அருகே மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் 324 விசைப்படகுகள் அனுமதி டோக்கன் பெற்று சுமார் 1,600 மீனவர்கள் கடலுக்குச் சென்றன.
இதில் கார்த்திக் ராஜா, சகாய ஆண்ட்ரிஸ் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப்படகுகள் நேற்று அதிகாலை நெடுந்தீவு அருக இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் பேரில் சிறைப்பிடிக்கப்பட்டது.
படகுகளிலிருந்த கண்ணன், காளி, முத்துராஜ், பத்ரப்பன், யாசின், சேசு, ராமகிருஷ்ணன், வேலு ஆகிய 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறையிலுள்ள இலங்கை கடற்படை முகாமிற்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.
8 மீனவர்களும் ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிகிறது. மேலும், கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தற்போது வரை 69 தமிழக மீனவர்களின் படகுகளை சிறைப்பிடித்து 537 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


