எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னை பல்லாவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க த.வெ.க.வினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நிவாரண பொருட்கள் வழங்க பிற கட்சிகளை அனுமதித்த நிலையில், தங்களை மட்டும் காவல்துறை தடுத்து நிறுத்தியதாக த.வெ.க.வினர் குற்றம் சாட்டி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பல்லாவரத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் மாநகராட்சி தண்ணீரை குடித்த 2 பேர் பலியானார்கள். குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் அவர்கள் உயிரிழந்ததாக அப்பக்குதி மக்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்து உள்ளது.
மேலும் உணவில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் சம்பவ இடத்தில் அனைத்து அதிகாரிகளும் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 2 பேர் இறந்ததற்கு காரணம் தரமற்ற உணவா?, குடிநீரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சென்னை பல்லாவரத்தில் தண்ணீரில் கழிவுநீர் கலந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
மேலும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர்களை சந்திக்கவும் த.வெ.க.வினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நிவாரண பொருட்கள் வழங்க பிற கட்சிகளை அனுமதித்த நிலையில், தங்களை மட்டும் காவல்துறை தடுத்து நிறுத்தியதாக த.வெ.க.வினர் குற்றம் சாட்டி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


