முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலங்கரை விளக்கம் - நீலாங்கரை இடையே விரைவில் கடல் பாலம் சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்

வெள்ளிக்கிழமை, 10 ஜனவரி 2025      தமிழகம்
EV-Velu

Source: provided

சென்னை: கலங்கரை விளக்கம் மற்றும் நீலாங்கரை இடையே 15 கி.மீ. தூரத்திற்கு கடல் பாலம் அமைக்கப்படும் என்று பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேரவைத் துணை தலைவர் பிச்சாண்டி, “நவி மும்பையில் கட்டப்பட்ட அடல் சேது பாலம் போன்று, இங்கும் பட்டினப்பாக்கத்தில் இருந்து மகாபலிபுரம் வரை கடல் பாலம் அமைத்தால் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கலாம், இடம் கையகப்படுத்தும் பணியும் இருக்காது. மும்பையில் பாலங்கள் அமைப்பதற்கு கடல்சார் வாரியம் அமைக்கப்பட்டு பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதேபோல் தமிழகத்திலும் கடல்சார் வாரியம் அமைக்கப்படுமா” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது: தமிழகத்தில் கடல்சார் வாரியம் முன்னதாகவே உள்ளது. அதன்மூலம் சிறு துறைமுகங்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மும்பை பாலத்தில் நானும் பயணித்தேன். அதன் விளைவாக, கலங்கரை விளக்கத்தில் இருந்து மகாபலிபுரம் என்பது நீண்ட தொலைவாக இருப்பதால், முதல்கட்டமாக கலங்கரை விளக்கத்தில் இருந்து நீலாங்கரை இடையே 15 கி.மீ. தூரத்திற்கு கடல் பாலம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.” என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து