முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் தனிமையில் இருப்பவர்களுக்கு நண்பராக இருந்து ஆண்டுக்கு ரூ.69 லட்சம் சம்பாதிக்கும் நபர்

வெள்ளிக்கிழமை, 10 ஜனவரி 2025      உலகம்
Japan 2025-01-10

Source: provided

டோக்கியோ : ஜப்பானில் தனிமையில் இருப்பவர்களுக்கு நண்பராக வாடகைக்கு செல்லும் நபர்  ரூ. 69 லட்சம் சம்பாதித்து வருகின்றார்.

ஜப்பான் கஜப்பானைச் சேர்ந்த 41 வயது ஷோஜி மோரிமோட்டோ என்பவர் 2018-ம் ஆண்டு அவர் பணிபுரிந்த நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதன்பிறகு எந்த வேலைக்கும் செல்லாத அவர், தனிமையில் இருப்பவர்களுக்கு துணையாக செல்வதன் மூலம் ஆண்டுக்கு 80 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் இந்திய மதிப்பு படி ரூ.69 லட்சம் சம்பாதித்து வருகிறார்.

தனிமையில் இருப்பவர்களுக்கு உரையாடும் நபராகவும், நட்பை நாடுபவர்களுக்கு வாடகை நண்பராகவும் செல்லும் பணியில் ஈடுபட்டு பிரபலமடைந்துள்ளார் ஷோஜி. மேலும், ஒருவர் வீட்டை சுத்தம் செய்யும்போது பேச்சுத் துணைக்காக நேரில் செல்வது, விடியோ காலில் அவர்களுடன் உரையாடுவது, இசை நிகழ்ச்சிக்கு வாடிக்கையாளருக்கு துணையாக அவரின் நண்பராக செல்வது போன்ற சேவைகளை ஷோஜி செய்து வருகிறார்.

ஆங்கில ஊடகத்துக்கு ஷோஜி அளித்த பேட்டியில், கொளுத்தும் வெயிலில் வரிசையில் நிற்பது, குளிரில் பல மணிநேரம் நிற்பது போன்ற பல்வேறு கடினமான சூழலையும் தான் சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆண்டுக்கு 1 ஆயிரம் கோரிக்கைகளை பெறும் ஷோஜி, 2 முதல் 3 மணிநேரத்துக்கு அதிகபட்சமாக ரூ. 17 ஆயிரம் வரை கட்டணமாக பெற்று வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து