எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடியது. இதில் 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 10 வருடங்களுக்கு பின் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. அதன்படி நடைபெற்ற இந்த தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் தடுப்பாட்டத்தில் கவனத்தை செலுத்தாமல் அதிரடியாக விளையாட முயற்சித்து முக்கியமான தருணங்களில் விக்கெட்டை தாரை வார்த்தார். இந்நிலையில் ரிஷப் பண்டிடம் உலகிலேயே மிகச்சிறந்த தடுப்பாட்டம் இருப்பதாக இந்திய முன்னாள் வீரர் அஸ்வின் பாராட்டியுள்ளார்.
இது குறித்து அஸ்வின் பேசியது பின்வருமாறு:- "ரிஷப் பண்ட் தடுப்பாட்டம் விளையாடி மிகவும் அரிதாகவே விக்கெட்டை இழப்பார். ஏனெனில் இந்த உலகிலேயே அவரிடம் சிறந்த தடுப்பாட்டம் இருக்கிறது. இப்போதெல்லாம் தடுப்பாட்டம் என்பது மிகவும் சவாலான ஒன்றாக மாறியுள்ளது. அவருக்கு எதிராக வலைப் பயிற்சியில் நான் நிறைய பவுலிங் செய்துள்ளேன். அப்போது போல்ட், எட்ஜ், எல்.பி.டபிள்யூ., முறைகளில் அவர் அவுட் ஆனதில்லை. அந்த வகையில் தனது கைகளில் அவர் சிறந்த தடுப்பாட்டத்தை வைத்துள்ளார்." என்று கூறினார்.
_________________________________________________________________________
இறுதிப்போட்டியில் மேடிசன் கீஸ்
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த தொடரில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், ரஷியாவின் லியுட்மிலா சாம்சோனோவா உடன் மோதினார். இந்த போட்டியில் முதல் செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் லியுட்மிலா சாம்சோனோவாவும், 2வது செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் மேடிசன் கீஸும் கைப்பற்றினர்.
தொடர்ந்து நடைபெற்ற 3வது செட்டில் 3-0 என்ற புள்ளிக்கணக்கில் மேடிசன் கீஸ் முன்னிலையில் இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக லியுட்மிலா சாம்சோனோவா காயம் அடைந்தார். இதன் காரணமாக அவர் போட்டியில் இருந்து வெளியேறினார். இதனால் மேடிசன் கீஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மேடிசன் கீஸ், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா - கஜகஸ்தானின் யூலியா புடின்ட்சேவா ஆகியோரில் ஒருவரை சந்திப்பார்.
_________________________________________________________________________
தொடக்க வீரர்களாக கோலி, பில் சால்ட்
18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக ( நவம்பர் 24 & 25-ம் தேதிகளில்) நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர். இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது ஏலத்திற்கு முன்பாக விராட் கோலி, ரஜத் படிதார் மற்றும் யாஷ் தயாள் ஆகிய 3 வீரர்களை மட்டுமே தக்க வைத்திருந்தது. அதுபோக ஏலத்தில் பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டன் , புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட முன்னணி வீரர்களை வாங்கியுள்ளது.
விராட் கோலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அடங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 சீசன்களாக ஒரு கோப்பையை கூட வெல்லவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்த அணிகளில் ஒன்றாக உள்ளது. அதனால் இம்முறை கோப்பையை வென்று ரசிகர்களின் நீண்ட கால ஏக்கத்தை அந்த அணி நீக்குமா? என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இந்நிலையில் பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளரான ஆண்டி பிளவர் அடுத்த ஐ.பி.எல். சீசனுக்கான தங்களது திட்டம் குறித்து முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் பில் சால்ட் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.
_________________________________________________________________________
செல்லப்பிராணியுடன் எம்.எஸ்.டோனி
ஓய்வுக்கு பின்னர் தனது குடும்பத்துடனும் செல்ல பிராணியுடனும் தோனி நேரத்தை செலவிட்டு வருகிறார். கிரிக்கெட் ஜாம்பவானும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனுமான தோனி, கிரிக்கெட் ஆடுகளத்தில் தனது விளையாட்டு நுணுக்கங்களுக்காவும், கணநேரத்தில் முடிவு எடுக்கும் திறனுக்காகவும் பெரிதும் போற்றப்படுபவர். கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றநிலையில் சி.எஸ்.கே அணிக்காக ஐ.பி.எல்-லில் மட்டும் விளையாடி வருகிறார்.
ஓய்வுக்கு பின்னர் தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார். குறிப்பாக தனது மகள் ஜிவாவுடன் பொழுதுபோக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ள தோனி, மகளுடன் இணைந்து செல்லப்பிராணி பராமரிப்பில் ஈடுபட்டார். தனது வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் செல்லப்பிராணி நாய்க்கு, தோனி 'சீப்பு'வை கொண்டு வாரி விட்டார். அருகில் உட்கார்ந்திருந்த ஜிவா, தந்தையின் நடவடிக்கையை பார்த்து சிரித்தப்படி நாயுடன் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
_________________________________________________________________________
ஓய்வை அறிவித்தார் வருண் ஆரோன்
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் சராசரியாக 145 கி.மீ.,வேகத்தில் பந்து வீசக்கூடியவர். இவர் இந்திய அணிக்காக 9 ஒருநாள் போட்டி மற்றும் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மொத்தமாக 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஓய்வு குறித்து அவர் கூறியதாவது:- கடந்த 20 ஆண்டுகளாக, நான் வேகமாகப் பந்து வீசுவதில் தான் வாழ்ந்திருக்கிறேன், சுவாசித்திருக்கிறேன், செழித்திருக்கிறேன். இன்று, மிகுந்த நன்றியுடன், பிரதிநிதித்துவ கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன்.
மேலும் பிசிசிஐ மற்றும் மாநில அணியான ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு நன்றி. தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள பிசியோக்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கும் நன்றி. ஆரோன் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு பங்கை வகித்ததற்காக தனது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், பயிற்சியாளர்கள், அணி வீரர்கள் உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவித்தார். வேகப்பந்து வீச்சுதான் எனது முதல் காதல். நான் மைதானத்தை விட்டு வெளியேறினாலும், அது எப்போதும் நான் யார் என்பதில் ஒரு பகுதியாகவே இருக்கும் என்று ஆரோன் கூறினார்.
_________________________________________________________________________
கிண்டல்களுக்கு ஸ்மித் பதில்
ஆஸி. டெஸ்ட் அணியின் தற்காலிக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தன்னைப் பற்றிய மணல் காகித மோசடியாளர் (சேண்ட்பேப்பர்கேட்) கிண்டலுக்கு பதிலளித்துள்ளார். இது குறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது:- ஒவ்வொருவருக்கும் தங்களது கருத்தைக்கூற உரிமை இருக்கிறது. அவர்களுக்குப் பிடித்ததைக் கூறலாம். நான் எனது நிலையில் மிகவும் சௌகரியாகவே உணர்கிறேன். நீண்ட காலமாக எங்களது அணி நல்ல சூழ்நிலையில் இருக்கிறது. அனைவரும் தங்களது கருத்தினை கூறுவார்கள். நான் எல்லாவற்றையும் வெற்றிகரமாக சமாளிப்பேன். வெற்றியில் பங்கெடுத்தது மகிழ்ச்சி. பெர்த் தோல்விக்குப் பிறகு மீண்டு வந்தது சிறப்பாக இருந்தது. இது குழுவுக்கு கிடைத்த வெற்றி.
எங்களது பந்துவீச்சாளர்கள் நம்பமுடியாத அளவுக்கு சிறப்பாக செயல்பட்டார்கள். ஸ்காட் போலண்ட் வந்தவிதம் அற்புதமானது. அந்தக் கணத்தில் அவர் செய்தது எல்லாம் நம்பமுடியாதது. 1 ரன். ஆமாம், அந்த நேரத்தில் சிறிது வருத்தமாக இருந்தது. என்னுடைய நண்பர்களுக்கு மத்தியில் நான் 10ஆயிரம் ரன்களை கடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். காலேவில் (இலங்கை டெஸ்ட்) இதை முதல் விஷயமாக செய்து முடிப்பேன். தொடர் முழுவதும் என மனதை எந்தவிதமான நோக்கமுமின்றி திரிந்ததால் அதை இழந்துவிட்டேன். 10 ஆயிரம் ரன்களை தாண்டுவது மகிழ்ச்சியான ஒரு விஷயம்தான் என்றார். இலங்கை உடனான ஆஸி. டெஸ்ட் ஜன.29ஆம் தேதி தொடங்குகிறது.
_________________________________________________________________________
கேப்டனாக கோலி: கில்கிறிஸ்ட்
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்ஷிப் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியதாவது:- ரோகித் சர்மா ஜூன் மாதம் நடக்கும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு செல்லமாட்டார். அவரது இலக்கு அனேகமாக சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியாக இருக்கும். அது முடிந்ததும் ஓய்வு பெற்று விடுவார் என்று நினைக்கிறேன். இந்திய அணியின் முழு நேர கேப்டனாக பும்ரா இருக்க முடியுமா என்பது தெரியவில்லை. அது அவருக்கு சவாலானதாக இருக்கும். அதனால் அடுத்த கேப்டனாக யார் வருவார்? கோலியை மறுபடியும் கேப்டன்ஷிப்புக்கு கொண்டு வர முயற்சிப்பார்களா? என்னை கேட்டால் கோலி மீண்டும் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்தியாவுக்கு இது சவாலான கால கட்டமாகும். மூத்த வீரர்கள் வெளியேறினால் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் இந்திய அணியில் இருக்கிறார்கள். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல திறமையான வீரர்களை உருவாக்கியுள்ளது. அதனால் 1 முதல் 11-வது வரை இந்த வரிசைக்கும் புதிய வீரர்களை கொண்டு வர முடியும். அதற்காக சர்வதேச போட்டியில் அது உடனடியாக வெற்றியை தேடி தரும் என்று அர்த்தம் கிடையாது. இந்திய அணிக்கு இது சற்று சவாலான நேரமாக இருக்கப்போகிறது. ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் அந்த நாட்டு பவுலர்கள் முழு உடல்தகுதியுடன் இருந்தால், நிச்சயம் ஆதிக்கம் செலுத்துவார்கள். இவ்வாறு கில்கிறிஸ்ட் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தி.மலை கோவிலில் பரபரப்பு: போலீசார் - ஆந்திர பக்தர்களிடையே வாக்குவாதம்
06 Dec 2025திருவண்ணாமலை கோவிலில் போலீசார் மற்றும் ஆந்திர பக்தர்களிடையே மோதல் ஏற்பட்டது.
-
குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்களை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
06 Dec 2025சென்னை, சாலைகளில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தங்கம் விலை உயர்வு
06 Dec 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.96,320-க்கு விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-12-2025.
06 Dec 2025 -
ஒரேநாளில் இண்டிகோ 1,000 விமானங்கள் ரத்து
06 Dec 2025டெல்லி, ஒரேநாளில் 1,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு இண்டிகோ நிறுவனம் திணறி வருகிறது.
-
இந்துக்கள் விழித்தெழும் நாள் ஒன்று வரும்: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆந்திர துணை முதல்வர் கருத்து
06 Dec 2025சென்னை, இந்துக்கள் விழித்தெழும் நாள் ஒன்று வரும் என்று திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கருத்து தெரிவித்துள்ளார்.
-
2 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி
06 Dec 2025இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
-
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு: காங்., மூத்த தலைவருடன் விஜய்யின் தந்தை சந்திப்பு
06 Dec 2025திருச்சி, காங்கிரஸ் மூத்த தலைவருடன் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் திடீர் சந்தித்ததால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணி: 99.81 சதவீதம் பேருக்கு படிவங்கள் விநியோகம்
06 Dec 2025சென்னை, தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிக்கு 99.81 சதவீதம் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு வடிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
-
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் 2 பேர் விலகல்
06 Dec 2025கேப்டவுன் : இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர்களான டோனி டி சோர்ஜி மற்றும் குவேனா மபாகா விலகியுள்ளனர்.
-
முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 265 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
06 Dec 2025சென்னை, முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் சமூக நல்லிணக்கத்துடன் வாழும் 10 கிராம ஊராட்சிகளுக்கு விருது, கல்வி உதவித்தொகை, சுயதொழில் புரிந்திட கடனுதவி என ரூ.26
-
மேகதாது அணை திட்ட அறிக்கை: திருப்பி அனுப்பியது காவிரி மேலாண்மை ஆணையம்
06 Dec 2025தஞ்சாவூர், காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணையை காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் பார்வையிட்டு ஆய்வு செய்த நிலையில், மேகதாது அணை திட்ட அறிக்கையை மத்
-
திருச்செந்தூரில் தீடீரென 75 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்...!
06 Dec 2025தூத்துக்குடி : திருச்செந்தூரில் திடீரென 75 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
காதலியுடன் ஆடம்பரமாக வாழ திருடிய வாலிபர் உள்பட 2 பேர் கைது
06 Dec 2025பெங்களூரு, காதலியுடன் ஆடம்பரமாக வாழவே திருடிய வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
டெல்லி காவல் நிலையத்தில் அன்புமணி மீது ராமதாஸ் தரப்பு புகார்
06 Dec 2025புதுடெல்லி, டெல்லி பாராளுமன்ற சாலை காவல் நிலையத்தில் அன்புமணி மீது ராமதாஸ் தரப்பில் ஜி.கே.மணி புகார் அளித்துள்ளார்.
-
மேலமடை சந்திப்பு மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
06 Dec 2025சென்னை, இன்று திறந்து வைக்கப்படவுள்ள மதுரை - சிவகங்கை மாவட்டங்களை இணைக்கும் மேலமடை சந்திப்பு சாலை மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயரை சூட்டிப் பெருமையடைகிறோ
-
வக்ப் உரிமையை காக்கக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்
06 Dec 2025சென்னை : வக்ப் மற்றும் வழிபாட்டு உரிமையை காக்க சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
இம்மாத இறுதியில் மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவாக வாய்ப்பு: தமிழகத்திற்கு அதிக மழை பொழிவு இருக்கும்
06 Dec 2025சென்னை, வடகிழக்கு பருவமழை காலத்தின் 3-வது புயல் சின்னம் தெற்கு வங்கக்கடலில் 23-ம் தேதிக்கு பிறகு உருவாவதற்கான சாதகமான சூழல் நிலவி வருகிறது என்று தனியார் வானிலை ஆய்வாளர்
-
ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்சில் ஆஸி., 511 ரன்களுக்கு ஆல்-அவுட்
06 Dec 2025பிரிஸ்பேன் : ஆஷஸ் 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 511 ரன்களுக்கு ஆல்-அவுடானது.
-
தெலுங்கானாவில் பரபரப்பு: 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
06 Dec 2025ஐதராபாத், தெலுங்கானாவில் 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
-
புதிய விதிகளை ஏற்க மறுப்பு: மஸ்கின் எக்ஸ் நிறுவனத்துக்கு 1,250 கோடி ரூபாய் அபராதம்
06 Dec 2025லண்டன், எலான் மஸ்க் எக்ஸ் வலைத்தள நிறுவனத்துக்கு ரூ.1,250 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
-
விஜய் - சக்கரவர்த்தி சந்திப்பு: செல்வப்பெருந்தகை கருத்து
06 Dec 2025சென்னை, விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது குறித்து தெரியாது என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
-
இண்டிகோ விமான சேவை பாதிப்பு: விமான டிக்கெட் விலை கடும் உயர்வு
06 Dec 2025டெல்லி, இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டதையடுத்து விமான டிக்கெட்டின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது.சென்னையில் இருந்து கோவைக்கு விமான டிக்கெட் விலை வழக்கமாக ரூ.5 ஆயிரத்து
-
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் தங்கத்தேர் வெள்ளோட்ட பணிகளை துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
06 Dec 2025சென்னை : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் தங்கத்தேர் வெள்ளோட்ட பணிகளை முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
நாகர்கோவில், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
06 Dec 2025சென்னை, நாகர்கோவில், கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


