முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து எதிரான தொடர்: கே.எல். ராகுலுக்கு ஓய்வு?

வெள்ளிக்கிழமை, 10 ஜனவரி 2025      விளையாட்டு
KL-Rahul 2023-08-29

Source: provided

புதுடெல்லி : இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கே.எல். ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் 22-ம் தேதி...

பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகளும், அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடைபெற உள்ளன. டி20 போட்டிகள் முறையே கொல்கத்தா, சென்னை, ராஜ்கோட், புனே, மும்பையிலும், ஒருநாள் போட்டிகள் நாக்பூர், கட்டாக், அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் நடக்கின்றன. இங்கிலாந்துக்கு எதிரான தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணிகள் வரும் 12ம் தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

சஞ்சு சாம்சனுக்கு...

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முன்னணி பேட்ஸ்மேனான கே.எல்.ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயம் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதன்மை விக்கெட் கீப்பராக ராகுல் தேர்வு செய்யப்படுவார் எனவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டு, அதில் சிறப்பாக செயல்படுபவரை சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான கூடுதல் விக்கெட் கீப்பராக இந்திய அணி தேர்வு செய்யும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து