Idhayam Matrimony

பெரியார் குறித்த பேச்சால் 70 வழக்குகள் பதிவு: விரைவில் சீமான் கைது..?

சனிக்கிழமை, 11 ஜனவரி 2025      தமிழகம்
Seaman 2024-02-17

Source: provided

சென்னை : பெரியார் குறித்து சர்ச்சையாக பேசிய சீமான் மீது தமிழகம் முழுவதும் 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் கைது நடவடிக்கை பாயும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் வடலூரில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். இதற்கு திராவிட கழகத்தினர் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சீமான் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.

சீமானின் இந்த பேச்சு சர்ச்சையானநிலையில், பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை கடந்த 3 தினங்களுக்கு முன்பு முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. அப்போது நாம் தமிழர் கட்சியின் கரூர் மண்டல செயலாளர் சசிகுமாரின் கார் கண்ணாடி கல்வீசி தாக்கப்பட்டது.

புதுச்சேரி நெல்லித்தோப்பில் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றிருந்த சீமானுக்கு எதிராக திராவிட இயக்க அமைப்பு களை சேர்ந்தவர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரியார் பற்றிய தன்னுடைய பேச்சு கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தாலும், தன்னுடைய கருத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று சீமான் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. சட்டத்துறை இணை செயலாளர் மருதுகணேஷ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இதேபோன்று தமிழகம் முழுவதும் சீமானுக்கு எதிராக தி.மு.க., திராவிட அமைப்புகள் சார்பில் தொடர்ந்து புகார் மனுக்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தற்போது வரையில் தமிழகம் முழுவதும் 70 வழக்குகள் சீமான் மீது பதிவாகி உள்ளது. இதன்படி சென்னை, கடலூர், கோவை, சேலம், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் தொடர்ந்து புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. முன்னதாக சீமானின் பேச்சை கண்டித்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்றுமுன்தினம் வெளியிட்ட அறிக்கையில், பெரியாரை அவமரியாதை செய்து அமைதியை சீர்குலைத்தால் சட்டம் தன் கடமையை செய்யும் என்று தெரிவித்திருந்தார்.

அதே வேளையில், பெரியார் பற்றி தான் கூறிய கருத்துகள் அனைத்தும் பெரியார் சொன்னதுதான். புத்தகத்தில் படித்துதான் இந்த கருத்துகளை சொல்லி வருகிறேன் என்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சீமான் விளக்கி கூறியிருக்கிறார். எனவே சீமான் மீது சட்டரீதியாக கைது நடவடிக்கை எடுப்பது பற்றி சட்ட வல்லுனர்களின் கருத்துகளை போலீஸ் அதிகாரிகள் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே சீமான் மீது விரைவில் கைது நடவடிக்கை பாயும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து