முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓய்வை மறைமுகமாக அறிவித்தாரா ஜடேஜா? - ரசிகர்கள் குழப்பம்

சனிக்கிழமை, 11 ஜனவரி 2025      விளையாட்டு
Jadeja 2024-03-17

Source: provided

மும்பை : இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜாவின் இன்ஸ்டாகிராம் பதிவால் அவரது ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

ஒருநாள் போட்டியில்.... 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, டி20 உலகக்கோப்பையை வென்றவுடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். இதனையடுத்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகிறார். சமீபத்தில் இந்திய அணி தோல்வியை தழுவிய பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் இடம்பெற்றிருந்தார். இருப்பினும் பெரிய அளவில் அசத்தவில்லை.

ஜடேஜா ஓய்வு பெற...  

இந்நிலையில் ஜடேஜா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படைத்தை பதிவிட்டு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார். இதனால் ஜடேஜா ஓய்வு பெற உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. அதில், தான் அணிந்திருந்த இந்திய டெஸ்ட் அணியின் ஜெர்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆனால் மேற்கொண்டு அதில் எதுவும் குறிப்பிடவில்லை.  ஒருவேளை தான் ஓய்வு பெற போவதை மறைமுகமாக ஜடேஜா அறிவித்துள்ளாரா? என்று ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். இருப்பினும் அவரது ஓய்வு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து