எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
19 வயதுக்கு உட்பட்டோருக்கான கூச் பெஹர் கோப்பை (4 நாள் ஆட்டம்) கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கடந்த 7-ந் தேதி தொடங்கியது. இதில் தமிழ்நாடு- குஜராத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்று முதலில் பேட் செய்த குஜராத் அணி முதல் இன்னிங்சில் 380 ரன்களும், தமிழகம் தனது முதல் இன்னிங்சில் 413 ரன்னும் எடுத்தன.
தொடர்ந்து 33 ரன் பிந்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய குஜராத் அணி 7 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி கடைசி நாளில் ஒரு விக்கெட்டுக்கு 55 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் டிராவில் முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. ஆட்டம் டிராவில் முடிந்தாலும் முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் தமிழக அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தமிழக வீரர் ஜெயந்த் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
________________________________________________________________________________________________
ஸ்டீவ் சுமித் அதிரடி சதம்
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான பிக் பாஷ் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஹென்ரிக்ஸ் தலைமையிலான சிட்னி சிக்சர்ஸ், ஆஷ்டன் டர்னர் தலைமையிலான பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற பெர்த் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு தொடக்க வீரரான ஸ்டீவ் சுமித் அதிரடியாக விளையாடி ரன் குவித்தார். பெர்த் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய அவர் சதமடித்து அசத்தினார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்த ஹென்ரிக்ஸ் 46 ரன்களும், துவாரசுயிஸ் 7 பந்துகளில் 23 ரன்களும் அடித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சிட்னி சிக்சர்ஸ் 3 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் குவித்தது. ஸ்டீவ் சுமித் 121 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார்.
பின்னர் 221 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பெர்த் அணியும் அதிரடியாக விளையாடியது. இருப்பினும் இலக்கை நெருங்க முடிந்ததே தவிர வெற்றி பெற முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் பெர்த் அணியால் 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி சிக்சர்ஸ் வெற்றி பெற்றது. பெர்த் தரப்பில் ஆஷ்டன் டர்னர் 66 ரன்கள் அடித்தார். சிட்னி தரப்பில் சீன் அபோட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஸ்டீவ் சுமித் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
________________________________________________________________________________________________
பும்ராவுக்கு மில்ஸ் பாராட்டு
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா எந்த அணிக்கு கிடைத்தாலும் அந்த அணி மிகவும் அதிர்ஷ்டமான ஒரு அணி என்று இங்கிலாந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளரான தைமல் மில்ஸ் பாராட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "பும்ரா போன்ற ஒரு வீரர் எந்த அணிக்கு கிடைத்தாலும் அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்தான். ஏனெனில் பும்ராவால் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியும்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் அவருடன் இணைந்து விளையாடியபோது அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். போட்டியின் எந்த சூழலிலும் சிறப்பாக பந்துவீசும் ஒரு பவுலர் என்றால் என்னை பொறுத்தவரை அது பும்ராதான். அந்த அளவிற்கு அவர் ஒரு மிகச்சிறப்பான பந்துவீச்சாளர். அவரைப்போன்ற ஒரு பந்துவீச்சாளர் எந்த அணிக்கு கிடைத்தாலும் அந்த அணிக்கு அவர் சொத்தாக மாறுவார். டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறப்பாக பந்துவீசும் அவர் தலைசிறந்த பவுலர்களின் பட்டியலில் தற்போதே இணைந்து விட்டார்" என்று கூறினார்.
________________________________________________________________________________________________
மேடிசன் கீஸ் சாம்பியன்
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டவரான மேடிசன் கீஸ் உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றினர். இதனால் 3-வது செட் பரபரப்புக்குள்ளானது. இறுதியில் 3-வது செட்டை கீஸ் கைப்பற்றி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். கீஸ் இந்த ஆட்டத்தில் 6-3, 4-6 மற்றும் 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
________________________________________________________________________________________________
டு பிளெஸ்ஸி பிட்னஸ் ரகசியம்
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரரும் ஜே.எஸ்.கே (ஜோகன்னஸ்பர்க் சூப்பர் கிங்ஸ்) அணியின் கேப்டனுமான பாப் டு பிளெஸ்ஸி 41 வயதை நெருங்கினாலும் பிட்டாக இருக்கிறார். உடல்நலத்தில் அதீத அக்கறை காட்டும் டு பிளெஸ்ஸி கூறியதாவது: நான் எனது உடலை நன்கு புரிந்து கொள்கிறேன். பொதுவாகவே நாம் உடல்நலத்துடன் இருக்க வேண்டுமென்றால் அதிகமாக செயல்பட வேண்டுமென்ற தவறான கருத்து நிலவி வருகிறது. நான் அப்படியாக நினைக்கவில்லை. நான் தொடர்சியாக உடற்பயிற்சி செய்கிறேனே தவிர அதிகமாக செய்வதில்லை. இது உங்களது நேரத்தை சரியாக பயன்படுத்துவதைப் பொறுத்தது. நீங்கள் இளமையாக இருக்கும்போது நேரடியாக சென்று எதையும் செய்யலாம். நீங்கள் எதையும் வார்ம்-அப் செய்ய வேண்டியதில்லை.
எதைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தற்போது, ஐஸ் பாத், ஊட்டச்சத்து அதிக அளவு மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. பின்தசை தொடை நார்கள் மிகவும் முக்கியமானது. நீங்கள் வித்தியாசமாக பயிற்சி செய்யும்போது அவை மிருகமாக மாறும். அடுத்து தூக்கம் மிகவும் முக்கியம். நான் இளமையாக இருக்கும்போது அதைச் செய்யவில்லை. அப்போது முயற்சித்தபோது அது சரியாகவும் வேலை செய்யவில்லை. நீங்கள் பரிணமிக்க வேண்டும். பிட்டாக இருப்பது மிகவும் சிறப்பாக இருக்கிறது. கடந்த 3 வருடமாக பேட்டிங்கில் முன்னேறி இருக்கிறேன். பயிற்சியிலும் அதேதான். அது நாம் பழக்கப்பட்ட மாதிரி இல்லை. எனது பிட்னஸ் சிறந்த தடகள வீரருடனும் என்னைவிட இளவயது நபர்களுடனும் போட்டியிட உதவுகிறது என்றார்.
________________________________________________________________________________________________
இலங்கை தொடரில் லயன்
நாதன் லயன் கூறியதாவது., எனக்கு விளக்கம் கூற கடினமாக இருக்கிறது. மருத்துவ பெயர்கள் குறித்து எனக்கு அவ்வளவாக தெரியாது. எனது இடுப்பில் உடல் உறுப்புகளை இணைக்கும் திரவம் அதிகமாக இருப்பதால் எனக்கு வலி அதிகமாக இருக்கிறது. எனக்கு முதல் டெஸ்ட்டிலிருந்தே இது இருக்கிறது. ஆனாலும், அது என்னை பந்துவீசுவதில் இருந்து தடுக்கவில்லை. நான் பந்துவீசும்போது இடுப்பு வலிக்கிறது. தற்போது பரவாயில்லாமல் இருக்கிறது. போட்டி முடிந்த பிறகு ஸ்கேன் செய்தேன். எல்லாம் சரியாக சென்றுக்கொண்டிருக்கிறது. வெள்ளிக்கிழமை முதல் உடற்பயிற்சி செய்து வருகிறேன்.
மற்ற எதையும் தொடர்பு கொள்ளவில்லை. இலங்கை தொடரில் நான் 100 சதவிகிதம் உடல்நலத்துடன் இருப்பேன். முதலில் அது சுழல்பந்துக்கான சாதகமான களமென நினைத்தேன். 2022இல் தினேஷ் சண்டிமல் 206 ரன்கள் எடுத்த ஆடுகளம்போல் இருந்தது. 5 சுழல்பந்துவீச்சாளர்களுடன் விளையாடுவார்கள் என்பது சந்தேகமே என்றார். முதல் டெஸ்ட்டு ஜன.29- பிப்.2வரையும் பிப்.6 -பிப்.10.வரை இரண்டாவது டெஸ்ட்டும் காலே மைதானத்தில் விளையாடுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தமிழக சட்டசபை இன்று கூடுகிறது
19 Jan 2026சென்னை, பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்ட சபை இன்று கூடுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி.
-
வரும் 22-ம் தேதி அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
19 Jan 2026சென்னை, மத்திய அமைச்சரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பா.ஜ.க. பொறுப்பாளருமான பியூஸ் கோயல் நாளை (புதன்கிழமை) சென்னைக்கு வருகை தரவுள்ளார்.
-
தொடர்ந்து 4-வது ஆண்டாக சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவு
19 Jan 2026பெய்ஜிங், சீனாவில் தொடர்ந்து 4-வது ஆண்டாக குழந்தைகள் பிறப்பு விகிதம் சரிவை கண்டுள்ளது. இது தொடர்பாக அரசு அறிவித்த பல்வேறு திட்டங்கள் பலனற்று போயின.
-
டெல்லியில் லேசான நிலநடுக்கம்
19 Jan 2026புதுடெல்லி, டெல்லியில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
நெம்மேலியில் ரூ.342.6 கோடியில் புதிதாக அமைகிறது நீர்த்தேக்கம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
19 Jan 2026செங்கல்பட்டு, 1.6 டி.எம்.சி.
-
லடாக்கில் நிலநடுக்கம்
19 Jan 2026புதுடெல்லி, லே லடாக் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
குடியரசு தினவிழா அணிவகுப்பு ஒத்திகை: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்து மாற்றம்
19 Jan 2026சென்னை, குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுகிறது.
-
பா.ஜ. புதிய தேசிய தலைவரை தேர்வு செய்ய இன்று தேர்தல்
19 Jan 2026புதுடெல்லி, பா.ஜ. புதிய தேசிய தலைவரை தேர்வு செய்ய இன்று தேர்தல் நடக்கிறது. இன்றே புதிய தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகிறது.
-
பா.ம.க. எங்களுக்கே சொந்தம்: ஐகோர்ட்டில் ராமதாஸ் வழக்கு
19 Jan 2026சென்னை, பா.ம.க. கட்சி விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
-
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றம்: 71 புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம்
19 Jan 2026சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு ரீதியான 71 மாவட்டங்களுக்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
செர்பியா நாட்டில் ஊழலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி
19 Jan 2026நோவி சாத், செர்பியா அரசில் ஊழலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணி நடத்தினர்.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
19 Jan 2026சென்னை, சென்னையில் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலை வணிகம் தொடங்கியதும், ஆபரணத் தங்கம் விலை மற்றும் வெள்ளி விலைகள் உயர்ந்து விற்பனையானது.
-
பனையூரில் இன்று நடைபெறுகிறது 12 பேர் அடங்கிய த.வெ.க.வின் தேர்தல் அறிக்கை குழு கூட்டம்
19 Jan 2026சென்னை, பனையூரில் இன்று நடைபெறுகிறது த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு கூட்டம்.
-
இ.பி.எஸ்.சுடன் தனியரசு சந்திப்பு?
19 Jan 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சந்தித்து பேசினார்.
-
காஸா தொடர்பான அமைதி வாரியம்: இந்தியாவுக்கு ட்ரம்ப் அழைப்பு
19 Jan 2026நியூயார்க், காஸாவில் மறுசீரமைப்புக்காகவும் அமைதியை நிலைநாட்டவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அமைதி வாரியத்தில் சேர இந்தியாவுக்கு அமெரிக்
-
அமெரிக்காவின் நலனுக்கு எது தேவையோ அதை செய்வேன்: அதிபர் டெனால்ட் ட்ரம்ப் அதிரடி முடிவு
19 Jan 2026நியூயார்க், இனி அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவின் நலனுக்கு எது தேவையோ அதைச் செய்வதில் கவனம் செலுத
-
தமிழகத்தில் விடைபெற்ற வடகிழக்கு பருவமழை இயல்பை விட 3 சதவீதம் குறைவு
19 Jan 2026சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விடைபெற்ற நிலையல் கடந்த ஆண்டை விட 3 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: விஜய்யிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் அடுக்கடுக்கான தொடர் கேள்வி: விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய திட்டம்
19 Jan 2026புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் 2-வது முறையாக நேரில் ஆஜரான த.வெ.க. தலைவர் விஜய்யிடம் தாமதமாக வர காரணம் என்ன? உள்ளிட்ட அடுக்கடுக்கான தொடர் கேள்விகளை சி.பி.ஐ.
-
கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்: கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர் ஸ்டாலின்
19 Jan 2026சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு, கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றுவரும் கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம் கட்டுமானப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில
-
பாகிஸ்தானில் பயங்கரம்: வணிக வளாக திடீர் தீ விபத்தில் 14 பேர் பலி
19 Jan 2026கராச்சி, பாகிஸ்தானில் நாட்டில் வணிக வளாக ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 14 பேர் பலியான சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30 வரை அவகாசம் நீட்டிப்பு
19 Jan 2026சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான காலஅவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
திபெத்தில் நிலநடுக்கம்
19 Jan 2026பெய்ஜிங், திபெத்தில் ரிக்டர் 4 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நெம்மேலியில் புதிதாக அமையவுள்ள 'மாமல்லன்' ஏரி மூலம் 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
19 Jan 2026மாமல்லபுரம், 69 ஏரிகளில் இருந்து வரும் உபரிநீரை சேமித்து மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் புதிதாக அமையவுள்ள மாமல்லன் ஏரி மூலம் 13 லட்சம் மக்களுக்கு குடிநீர் வழங்க முடியும
-
அவதூறு வழக்கில் கோர்ட்டில் நேரில் ஆஜராகாத ராகுல் காந்தி விசாரணை ஒத்திவைப்பு
19 Jan 2026லக்னோ, பா.ஜ.க. நிர்வாகி தொடர்ந்த வழக்கில் ராகுல் காந்தி கோர்ட்டில் ஆஜராகததால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
-
ஸ்பெயின் ரயில் விபத்தில் உயிரிழப்பு 21 ஆக உயர்வு
19 Jan 2026மாட்ரிட், ஸ்பெயின் நாட்டில் நடந்த ரயில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.


