முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பிரசாரத்தை தொடங்கிய தி.மு.க.

புதன்கிழமை, 15 ஜனவரி 2025      அரசியல்
DMK-Offces 2023 03 31

ஈரோடு, ஈரோடு கிழக்கு தொகுதியில் வீடு வீடாக சென்று தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் வாக்கு சேகரித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. அ.தி.மு.க, பா.ஜ.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இந்த இடைத்தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், தி.மு.க. சார்பில் வி.சி. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையை தி.மு.க. நேற்று தொடங்கி உள்ளது. இதன்படி பெரியார் நகரில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் மற்றும் அமைச்சர் முத்துசாமி உள்ளிட்டோர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.

கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். அவரது மறைவுக்குப் பிறகு 2023-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி நடந்த இடைத்தேர்தலில், தி.மு.க. கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்றார். அவரது மறைவால் வரும் பிப்ரவரி 5-ம் தேதி ஈரோடு கிழக்கில் 2-வது முறையாக இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 2021 முதல் ஈரோடு கிழக்கு தொகுதியில் 2 முறை காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை ஆளும் தி.மு.க.வே களம் காண்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து