முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் போட்டியிட முதல்வர் சந்திரபாபு நிபந்தனை

வியாழக்கிழமை, 16 ஜனவரி 2025      இந்தியா
Chandrababu-Naidu 2024-06-2

ஐதராபாத், ஆந்திர மாநிலத்தில் ஒருவருக்கு இரண்டு பிள்ளைகளுக்கு மேல் இருந்தால் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் அல்லது மேயராக முடியும் என்று அந்த மாநில முதல்வர் என். சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஒரு காலத்தில் பல பிள்ளைகளைக் கொண்ட தனிநபர்கள் பஞ்சாயத்து, உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை. ஆனால் தற்போதைய நிலையில் குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகளைக் கெண்ட தனிநபர்கள் போட்டியிட அனுமதி இல்லை. பழைய தலைமுறையினருக்கு அதிக பிள்ளைகள் இருந்ததாகவும், தற்போதைய தலைமுறையினர் ஒரு குழந்தையாகக் குறைத்துள்ளதாகவும் இதனால் மக்கள்தொகை வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

தென் கொரியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளை மேற்கோள் காட்டி, அந்த நாடுகள் மக்கள் தொகை வீழ்ச்சியின் ஆபத்தை உணரவில்லை, ஆனால் செல்வத்தை உருவாக்குவது, வருமானத்தை அதிகரிப்பது மற்றும் நாடுகளை முன்னேற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். தற்போது அந்த நாடுகளுக்கு மக்கள் தேவை அதிகரித்துள்ளது. தற்போது நாமும் அந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

பிறப்பு விகிதம் சரிந்துள்ள தென் கொரியா, ஜப்பான் போன்ற பிற நாடுகளில் செய்த தவறுகளை இந்தியா மீண்டும் செய்யக்கூடாது. எனவே இரண்டு பிள்ளைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து