எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, சயீப் அலிகானை, கத்தியால் குத்திய குற்றவாளி வீட்டின் அவசரகால பயன்பாட்டுக்கான படிகட்டு வழியாக அவரது வீட்டுக்குள் ஏறி வந்திருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
54 வயதாகும் நடிகரின் வீடு, பாந்த்ராவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 11வது மாடியில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையனால் சயீப் அலிகான், கத்தியால் குத்தப்பட்டதும், அவரது மகன், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி அங்கிருந்து தப்பியோடியிருக்கிறார்.
கொள்ளையன், அந்த வீட்டின் அவசரகால பயன்பாட்டுக்கான படிகட்டு வழியாக நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டுக்குள் ஏறி வந்திருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். வீட்டுப் பணியாளர் அவரைப் பார்த்து யார் என்று கேட்டபோது தகராறு ஏற்பட்டு, பணியாளரைத் தாக்க முயன்றபோது அதனைத் தடுக்கச் சென்ற சயீப் அலிகானை, குற்றவாளி கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது. குற்றவாளி வீட்டுக்குள் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு நுழைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து, 10 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


