முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுராஷ்டிரா அணிக்கு எதிராக டெல்லி ரஞ்சி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட்?

வியாழக்கிழமை, 16 ஜனவரி 2025      விளையாட்டு
Rishabh-Pant-2025-01-16

மும்பை, ரஞ்சி போட்டியில் சவுராஷ்டிரா அணிக்கு எதிராக டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெய்ஸ்வால்...

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் அடுத்தகட்ட லீக் சுற்று ஆட்டங்கள் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. இதில் முன்னணி வீரர்களான இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் டெல்லி அணிக்காகவும், தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் மும்பை அணிக்காகவும் மற்றும் சுப்மன் கில் பஞ்சாப் அணிக்காகவும் களமிறங்க உள்ளனர். விராட் கோலி டெல்லி அணியின் உத்தேச பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். ஆனால் அவர் விளையாடுவது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதேபோல் ரோகித் சர்மா மும்பை அணியுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டார். ஆனால் விளையாடுவது குறித்தும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

சவுராஷ்டிரா....

இந்நிலையில் வருகிற 23-ம் தேதி தொடங்க உள்ள சவுராஷ்டிரா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மொத்த அணியின் விவரங்களும் அதிகாரப்பூர்வமாக இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து