எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக மிகவும் சிறப்பான அணியை பிசிசிஐ அறிவித்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் பிசிசிஐ-யை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்திய அணித் தேர்வுக்குழு உறுப்பினர்களையும், பிசிசிஐயையும் பாராட்ட விரும்புகிறேன். இந்திய அணிக்காக விளையாடிய வீரர்கள் அணியைத் தேர்வு செய்துள்ளனர். அவர்கள் சரியான வீரர்களை அணிக்குத் தேர்வு செய்துள்ளார்கள்.
ரோகித் சர்மா கேப்டனாக அணியை வழிநடத்த, ஷுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏனெனில், எதிர்காலத்தில் ஷுப்மன் கில் அணியை வழிநடத்த அணியின் துணைக் கேப்டனாக செயல்படுவது அவருக்கு உதவியாக இருக்கும். இதுவே சரியான அணுகுமுறை. வீரர்களின் கடினமான காலத்தில் அவர்களுக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும். எதிர்காலத்தில் இந்திய அணிக்காக மிகப் பெரிய வீரராக உருவெடுக்கவுள்ள அபிஷேக் சர்மா, சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இடம்பெற்றிருக்க வேண்டும் எனக் கூறுவேன். ஏனெனில், இந்த தொடர், அவர் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்வதற்கான மிகப் பெரிய வாய்ப்பாக இருந்திருக்கும் என்றார்.
__________________________________________________________________________________
டெல்லி கேப்டன் அக்சர் படேல்
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் மார்ச் 21-ம் தேதி தொடங்க உள்ளது.10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக ( நவம்பர் 24 & 25-ம் தேதிகளில்) நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர்.
இதில் லக்னோ அணியின் முன்னாள் கேப்டனான கே.எல். ராகுலை ரூ.14 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி வாங்கியது. டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்டை லக்னோ ஏலத்தில் எடுத்தது. இதனால் டெல்லி அணியின் புதிய கேப்டனாக கே.எல். ராகுல் நியமிக்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். இந்நிலையில் டெல்லி அணியின் புதிய கேப்டனாக அக்சர் படேல் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அக்சர் படேல் இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அதனை கருத்தில் கொண்டே டெல்லி அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
__________________________________________________________________________________
கருண் நாயர் குறித்து அகர்கர்
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் மட்டுமின்றி இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியிலும் கருண் நாயர் இடம் பெறவில்லை. இந்நிலையில், இந்திய அணியில் கருண் நாயர் இடம் பெறாதது ஏன்..? என்பது குறித்து இந்திய தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, அது (கருண் நாயர் செயல்பாடு) மிகவும் ஸ்பெஷல் செயல்பாடு. ஒருவர் 752 ரன்களை 752 என்ற சராசரியில் அடிப்பது அற்புதமானது.
அது போன்ற செயல்பாடுகளை பற்றி நாங்களும் பேசினோம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், தற்போது இந்திய அணியில் வாய்ப்பைப் பிடிப்பது மிகவும் கடினம். ஏனெனில், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வீரர்கள் அனைவருமே 40-க்கும் மேற்பட்ட சராசரியை கொண்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். துரதிஷ்டவசமாக அனைவரையும் உங்களால் அணியில் தேர்ந்தெடுக்க முடியாது, இது 15 பேர் கொண்ட அணி மட்டுமே. அதே சமயம் அது போன்ற செயல்பாடுகள் உங்களுடைய கவனத்தை ஈர்க்கும். இவ்வாறு அவர் கூறினார்.
__________________________________________________________________________________
4-வது சுற்றில் ஜன்னிக் சின்னெர்
'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து கொண்ட ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னெர், அமெரிக்காவின் மார்கோஸ் கிரோன் உடன் மோதினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சின்னெர் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் மார்கோஸ் கிரோனை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார். வரும் 20ம் தேதி நடைபெறும் 4வது சுற்று ஆட்டத்தில் ஜன்னிக் சின்னெர், செர்பியாவின் மியோமிர் கெக்மனோவிக் அல்லது டென்மார்க்கின் ஹோல்கர் ரூனே ஆகிய இருவரில் ஒருவரை எதிர்கொள்வார்.
__________________________________________________________________________________
5-வது ஆண்டாக ஆர்.சி.பி. சாதனை
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மீண்டும் ஒருமுறை சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான ஐபிஎல் அணி என்ற நிலையை தக்கவைத்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக முதல் இடம் பிடித்த ஐபிஎல் அணி என்ற சாதனையை ஆர்சிபி படைத்துள்ளது. சமூக ஊடக பகுப்பாய்வு சோஷியல் இன்சைடர் மற்றும் எஸ்இஎம் ரஷ் படி ஆர்சிபி அணியின் இன்ஸ்டாகிராம், எக்ஸ்தளம், யூடியூப் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றில் மொத்த ஈடுபாடு 2024-ம் ஆண்டில் 2 பில்லியனை எட்டியுள்ளது. இது 2-வது இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியை விட 25 சதவீதம் அதிகமாகும்.
ஆர்சிபியின் டிஜிட்டல் இருப்பு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 5 மில்லியன் அதிகரித்து, ஆன்லைனில் வேகமாக வளர்ந்து வரும் ஐபிஎல் அணியாக மாறியுள்ளது. மேலும் இன்ஸ்டாகிராமில் முதல் 5 உலகளாவிய விளையாட்டு அணிகளில் ஆர்சிபி அணி இடம்பிடித்துள்ளது. ரியல் மாட்ரிட் மற்றும் எஃப்சி பார்சிலோனாவுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் ஆர்சிபி உள்ளது. ஆர்சிபி தனது வாட்ஸ்அப் ஒளிபரப்பு சேனலில் 7.5 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் தனது வரம்பை மேலும் விரிவுபடுத்தியுள்ளது, இது வாட்ஸ்அப்பில் அதிகம் பின்தொடரும் ஐபிஎல் அணியாக மாறியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
மீண்டும் சரிந்த தங்கம் விலை
09 Mar 2026சென்னையில் நேற்று தங்கம் விலை மீண்டும் குறைந்து விற்பனையானது.
-
மீண்டும் தள்ளிப்போகிறதா? 'ஜனநாயகன்' திரைப்படம் மறு ஆய்வு ஒத்திவைப்பு
09 Mar 2026சென்னை, விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கான மறு ஆய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
மத்திய அரசு நடைமுறைப்படுத்த விரும்பும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நோயை விட கொடுமையானது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
09 Mar 2026சென்னை, மத்திய அரசு நடைமுறைப்படுத்த விரும்பும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நோயை விட கொடுமையானது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தமிழக சட்டசபை தேர்தல் தேதி வரும் 15ம் தேதி வெளியாகிறது
09 Mar 2026சென்னை, வரும் 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதியை அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
-
ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி அறிவிப்பு
09 Mar 2026தெஹ்ரான், ஈரானின் புதிய உச்ச தலைவரை தேர்வு செய்வதற்காக மதகுருமார் கவுன்சில் ஆலோசனை நடத்தியது.
-
பாராளுமன்ற மாநிலங்களவை தேர்தல்: 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
09 Mar 2026சென்னை, தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் 4 பேர், அ.தி.மு.க.
-
மேற்கு ஆசிய போர் பதற்றம்: பாராளுமன்ற விவாதம் கோரி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
09 Mar 2026புதுடெல்லி, மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் குறித்தும், அதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் குறித்தும் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்தி எத
-
சட்டசபை தேர்தல் நடைபெறும் 3 மாநிலங்களில் பா.ஜ.க. மத்திய பார்வையாளர்கள் நியமனம்
09 Mar 2026டெல்லி, மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மூன்று மாநிலங்களுக்கு மத்திய பார்வையாளர்களை பா.ஜ.க. தலைவர் நிதின் நவீன் நியமித்தார்.
-
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு விஜய் வாழ்த்து
09 Mar 2026சென்னை, டி-20 உலக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.
-
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி தொடர்ந்தால்தான் தமிழ் சமூகம் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைக்கும் : திருச்சி தி.மு.க. மாநாட்டில முதல்வர் மு.கஸ்டாலின் பேச்சு
09 Mar 2026தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி தொடர்ந்தால்தான் தமிழ் சமூகம் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கிடைக்கும் என்று திருச்சி தி.மு.க. மாநாட்டில முதல்வர் மு.கஸ்டாலின் பேசினார்.
-
3 கோரிக்கைகளை வலியுறுத்தி த.வெ.க. தலைமையில் 12-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
09 Mar 2026சென்னை, விஜய்யின் மக்கள் சந்திப்பை முடக்கும் வகையிலான வழிகாட்டு நெறிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை வழியுறுத்தி வரும் மார்ச் 12-ம் தேதி த,வெ,க, சா
-
அமித்ஷா குறித்து சர்ச்சை கருத்து: ராகுல் மீதான அவதூறு வழக்கு: வருகிற 12-ம் தேதி விசாரணை
09 Mar 2026டெல்லி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணை வரும் 12-ம் தேதி மீண்டும் நடைபெறவுள்ளது.
-
சவுதியில் இந்தியர் கொல்லப்பட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை: இந்திய தூதரக அதிகாரி தகவல்
09 Mar 2026ரியாத், ஈரான் போர் அதிகரித்து வரும் நிலையில், சவுதி அரேபியாவில் 'ஏவுகணை தாக்குதலில்' ஒரு இந்தியர் இறந்ததாக வெளியான செய்திகளை ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் நிராகரித்தது.
-
பராமரிப்பு சார்ந்த பொருளாதாரம் இந்திய இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை அளிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
09 Mar 2026புதுடெல்லி, குழந்தைகளை பராமரித்தல், முதியோர்களை பராமரித்தல், சுகாதாரத்தை பராமரித்தல் உள்ளிட்ட பராமரிப்பு சார்ந்த பொருளாதாரம், இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை அளிப்பதாக
-
வயது மூப்பு மற்றும் மருத்துவக் காரணங்களால் நிர்வாக முடிவுகளை எடுக்கும் நிலையில் ராமதாஸ் இல்லை: நீதிமன்றத்தில் அன்புமணி தரப்பில் மனு தாக்கல்
09 Mar 2026சென்னை, 87 வயதாகும் ராமதாஸ் மருத்துவ காரணங்களால் பா.ம.க.வின் நிர்வாக முடிவுகளை எடுக்கும் நிலையில் இல்லை.
-
ஈரான் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பார்லி.யில் ஜெய்சங்கர் விளக்கம்
09 Mar 2026புதுடெல்லி, ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் போர் விவகாரத்தில், பதற்றத்தைத் தணிக்க பேச்சுவார்த்தையும் ராஜதந்திரமுமே சரியான தீர்வைத் தரும் என்று பாராளுமன்றத்தில் மத்திய வ
-
நேபாள நாடாளுமன்ற தேர்தல்: ராஷ்டிரிய சுதந்திர கட்சி பெரும்பான்மை வெற்றி: பிரதமராக பொறுப்பேற்கிறார் பாலேந்திர ஷா
09 Mar 2026காத்மண்டு, ராஷ்டிரிய சுதந்திர கட்சி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ள நிலையில் அந்த கட்சியின் பாலேந்திர ஷா பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.
-
வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் ரூ. 5.08 கோடியில் அமைக்கப்பட்ட அகத்தியர் நகர் விளையாட்டு திடல்: துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்
09 Mar 2026சென்னை, வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் 5.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய விளையாட்டு திடலை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: காங்., வேட்பாளர்களை தேர்வு செய்ய 4 பேர் சிறப்பு குழு நாளை ஆலோசனை
09 Mar 2026சென்னை, காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்ய 4 பேர் கொண்ட சிறப்பு குழு நாளை சென்னையில் ஆலோசனை நடத்துகிறது.
-
கொச்சியில் நாளை நடைபெறவுள்ள என்.டி.ஏ. தேர்தல் பிரச்சார கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு
09 Mar 2026கொச்சி, கொச்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் நாளை நடைபெறும் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாளை பங்கேற்கிறார்.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய் நேரில் ஆஜராக சி.பி.ஐ. மீண்டும் சம்மன்
09 Mar 2026புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி விஜய் இன்று (மார்ச் 10) டெல்லி சி.பி.ஐ.
-
கூடுதல் வரி விதிப்பதாக ட்ரம்ப் மிரட்டல்: அமெரிக்காவில் தென்கொரியா 29 லட்சம் கோடி ரூபாய் முதலீடு
09 Mar 2026சியோல், தென் கொரிய பொருட்கள் மீது 25 சதவீத கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்திருந்த மிரட்டல், தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்ப
-
கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: விலைவாசி உயர்வை தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கை: பார்லி.யில் நிர்மலா சீதாராமன் பதில்
09 Mar 2026புதுடெல்லி, கச்சா எண்ணெய் விலை தற்போது உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் பணவீக்கம் குறைந்த அளவிலேயே இருப்பதால் கச்சா எண்ணெய் உயர்வு பாதிப்பை ஏற்படுத்தாது.
-
திருப்புவனமம் காவலாளி அஜித்குமார் மீது நிகிதா அளித்த நகை திருட்டு புகாரை முடித்து வைத்தது மதுரை நீதிமன்றம்
09 Mar 2026சிவகங்கை, மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் அஜித்குமார் மீது நிகிதா அளித்த நகை திருட்டு புகாரை முடித்து வைப்பதாக மதுரை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
09 Mar 2026அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 92.33 ஆக கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.


