எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நியூயார்க் : 47வது அமெரிக்க அதிபராகும் டிரம்ப் பதவியேற்று 100 நாட்களுக்குள் டிரம்ப் சீனா மற்றும் இந்தியாவுக்கு வருகை தருவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் 47வது அமெரிக்க அதிபராக இன்று பதவியேற்கிறார். குடியேற்றங்கள், மற்ற நாடுகளுடனான வரிக் கொள்கைகள் உள்ளிட்டவற்றில் டிரம்ப் கடுமை காட்டி வருகிறார். கடந்த 2016-20 பதவிக்காலத்தில் எந்த அமெரிக்க அதிபரும் நுழையாத வட கொரியாவுக்கே டிரம்ப் விஜயம் செய்திருந்தார். ரஷியாவுடன் இணக்கமான போக்கை கையாண்டார். அந்த வகையில் இந்த 2025-29 பதவிக்காலத்திலும் டிரம்ப் உலக அரசியலில் தாக்கம் செலுத்துவார் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
அந்த வகையில் டொனால்டு டிரம்ப், தான் பதவியேற்ற பிறகு, சீனாவுக்குச் செல்ல விரும்புவதாக ஆலோசகர்களிடம் தெரிவித்திருக்கிறார் என்று தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சீன இறக்குமதிகள் மீது அதிக வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் கூறி வரும் சூழலில் அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங்குடனான உறவை வலுப்படுத்த டிரம்ப் திட்டமிட்டுள்ளார் என்றும் அவருடன் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க உள்ளார் என்றும் வால் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. ஒரு நாள் முன்னதாக டிரம்ப் ஜி ஜின்பிங்குடன் டெலிபோனில் உரையாடியதை அடுத்து இந்த தகவல் வந்துள்ளது.
தொடர்ந்து டிரம்ப் இந்தியாவுக்குச் செல்லக்கூடிய சாத்தியம் குறித்து ஆலோசகர்களுடன் பேசியதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர் என்று வால் ஸ்ட்ரீட் குறிப்பிடுகிறது தகவலின்படி, கடந்த மாதம் கிறிஸ்துமஸை ஒட்டி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் வாஷிங்டன் டிசிக்கு வருகை தந்தபோது பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.
டிரம்பின் இந்தியா வருகை இந்த வருடம் ஏப்ரல் தொடக்கத்தில் அல்லது ஆண்டின் பிற்பகுதியில் இருக்கலாம் என்று வால் ஸ்ட்ரீட் அறிக்கை கூறுகிறது. இந்த வசந்த காலத்தில் வெள்ளை மாளிகை கூட்டத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடியை டிரம்ப் அழைக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


