முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆவடி அருகே மர்ம நபர்களால் சகோதரர்கள் வெட்டிக்கொலை

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2025      தமிழகம்
MDS 2025-01-19

Source: provided

ஆவடி : ஆவடி அருகே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள சகோதரர்கள் இருவர் கடந்த சனிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆவடியை அடுத்த பட்டாபிராம், ஆயில்சேரி கிராமம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மகன்கள் இரட்டைமலை சீனிவா சன் (27), ஸ்டாலின் (24). இருவர் மீதும் பட்டாபிராம், ஆவடி, பூந் தமல்லி உள்ளிட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை மாலை இரட்டை மலை சீனிவாசனை வீட்டருகே மர்ம நபர்கள் வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்களில் ஒருவர் இரட்டை மலை சீனிவாசனின் காலில் அரிவாளால் வெட்டியுள்ளார். இதையடுத்து, அவர்களிடமிருந்து தப்பியோடிய இரட்டைமலை சீனிவாசன் ஆவடி, தனலட்சுமி நகர் பகுதிக்குச் சென்றுள்ளார். பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள், அங்கு வைத்து அவரை சரமாரியாக வெட்டிக் கொலைசெய்தனர். தகவல் அறிந்த இரட்டைமலை சீனிவாசனின் தம்பி ஸ்டாலின் ஓடி வந்த நிலையில், அவரையும் ஆயில் சேரி பகுதியில் மர்ம நபர்கள் சுத்தி, அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். பின்னர் மர்ம கும்பல் ஆயுதங்களுடன் அங்கிருந்து தப்பி தலைமறைவானது. 

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆவடி மற்றும் பட்டாபிராம் போலீசார், கொலை செய்யப்பட்ட இருவரது சடலங்களையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவ இடங்களுக்கு ஆவடி காவல் துணை ஆணையர் ஐமான் ஜமால் தலைமையில் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிந்து, கொலையாளிகளைப் பிடிக்க 6 தனிப் படை அமைத்து தேடி வருகின்றனர். இதையடுத்து, பட்டாபிராம் அருகே ஆயில் சேரி பகுதியில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து