முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் ?

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2025      விளையாட்டு
Rishabh-Pant 2023-12-12

Source: provided

லக்னோ : லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடப்பு ஐ.பி.எல். தொடர்....

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் மார்ச் 21-ம் தேதி தொடங்க உள்ளது.10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக ( நவம்பர் 24 & 25-ம் தேதிகளில்) நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர்.

ரூ.27 கோடிக்கு ரிஷப் பண்ட்

இதில் டெல்லி அணியின் முன்னாள் கேப்டனான ரிஷப் பண்டை ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு (ரூ.27 கோடி) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வாங்கியது. லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுலை டெல்லி வாங்கியது. கே.எல். ராகுலை கழற்றி விடும் முன்பே லக்னோ அணியின் கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரனை நியமிக்க அந்த அணி நிர்வாகம் முடிவு செய்ததாக கூறப்பட்டது.

புதிய கேப்டனான நியமனம்....

இந்நிலையில் இந்த வருடம் நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து