முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7 வயது சிறுவனை மதுகுடிக்க வைத்து வீடியோ வெளியிட்ட ஆட்டோ டிரைவர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2025      தமிழகம்
Jail

Source: provided

திருச்சி : திருச்சி அருகே 7 வயது சிறுவனை மதுகுடிக்க வைத்து அதை வீடியோவாக வெளியிட்ட ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த புதூர் உத்தமானூரைச் சேர்ந்தவர் அஜித்குமார். ஆட்டோ டிரைவர். பொங்கல் நாளில் மது அருந்திய அவர், சும்மா இருக்காமல் தமது அருகில் இருந்த 7 வயது சிறுவனுக்கு அந்த மது பானத்தை குடிக்க கொடுத்துள்ளார். அந்த சிறுவனும் அதை வாங்கி குடித்துள்ளான்.

மது கொடுத்து அதை குடிக்க வைத்ததோடு நில்லாமல், செல்போனில் வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களில் அஜித்குமார் வெளியிட்டு உள்ளார். 7 வயது சிறுவன் மது குடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. அதோடு கடும் கண்டனங்களும் எழுந்தன.

வீடியோவை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். அதை தொடர்ந்து சிறுவனை மது குடிக்க வைத்த அஜித்குமாரை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து