முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தை தெப்பத்திருவிழா ஜன. 31-ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்

புதன்கிழமை, 22 ஜனவரி 2025      ஆன்மிகம்
Meenachi 2024-04-19

Source: provided

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத்திருவிழா வருகிற 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்நிலையில் மீனாட்சி அம்மன் கோவிலில் தை மாத தெப்பத்திருவிழா வருகிற 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 11-ந் தேதி வரை நடக்கிறது.

வருகிற 31-ந் தேதி காலை சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் திருவிழாவிற்கான கொடி ஏற்றப்படும். அப்போது சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் எழுந்தருளி காட்சி அளிப்பார்கள். தொடர்ந்து சுவாமி 2-ம் பிரகாரத்தில் மீனாட்சி, சுந்தரேசுவரர் வலம் வருவார்கள். மேலும் திருவிழா நடைபெறும் நாட்களில் காலை, இரவு சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.

விழாவில் அடுத்த மாதம் 5-ந் தேதி சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலையும், 7-ந் தேதி வலை வீசி அருளிய லீலையும் நடைபெறுகிறது. 9-ந் தேதி தெப்பத்திருவிழாவிற்கு முன்னோட்டமாக தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சியும், 10-ந் தேதி சிந்தாமணியில் கதிரறுப்பு திருவிழாவும் நடைபெறுகிறது. மேலும் சிகர நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் காமராஜர் சாலையில் உள்ள தெப்பக்குளத்தில் 11-ந் தேதி நடக்கிறது. 

அன்றைய தினம் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் அதிகாலை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து புறப்பாடாகி தெப்பக்குளத்தை சென்றடைவர். அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் காலையில் எழுந்தருளி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. காலை 2 முறையும், இரவு ஒரு முறையும் சுவாமி தெப்பத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினரும், கோவில் நிர்வாகமும் செய்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து