முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழத்தில் இளவயது கர்ப்பம் அதிகரிப்பு: அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 23 ஜனவரி 2025      தமிழகம்
OPS 2024-11-17

Source: provided

சென்னை: இளவயது கர்ப்பம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது மாநில அரசின் கடமை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.;

பள்ளிகளிலும், பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, இளவயது கர்ப்பத்தை தடுத்து நிறுத்த தி.மு.க. அரசு முன் வரவேண்டுமென்று தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

அளவான குடும்பத்தின் முக்கியத்துவம், பாலின சமத்துவம், பிறப்புகளுக்கிடையே போதிய இடைவெளி, திருமண வயதை உயர்த்துதல், இளவயது கர்ப்பம் ஆகியவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது மாநில அரசின் கடமை. மருத்துவக் குறியீடுகளில் தமிழ்நாடு முன்னிலையில் இருந்து வருகின்ற நிலையில், கடந்த ஐந்தாண்டுகளில் இளவயது கர்ப்பம் அதிகரித்துள்ளதாக பொதுச் சுகாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

கடந்த ஐந்தாண்டுகளில், கருத்தரித்த தாய்மார்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து இருந்தாலும், இளவயது கர்ப்பம் அதிகரித்து இருக்கிறது. 2019-2020 ஆண்டில் 11,772 என்ற எண்ணிக்கையில் இருந்த இளவயது கர்ப்பம், 2023-2024ம் ஆண்டில் 14,360 ஆக உயர்ந்துள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அதாவது, 20 சதவீதம் அதிகரித்துள்ளது. 2023-2024ம் ஆண்டில் கருத்தரித்த தாய்மார்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் 1.5 சதவீதம் இளவயது கர்ப்பம் என்பது மிக அதிகம்.

பெண்ணின் திருமண வயது குறைந்தபட்சம் 18 என்று இருக்கின்ற நிலையில், 2023-2024ம் ஆண்டில் மட்டும் 13 முதல் 19 வரையிலான 14,360 பெண்கள் கருத்தரித்து இருக்கிறார்கள் என்றால், சட்டம் சரியாக செயல்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. எனவே இது குறித்த விழிப்புணர்வை பள்ளிகளிலும், பொதுமக்களிடமும் ஏற்படுத்தி, இளவயது கர்ப்பத்தை தடுத்து நிறுத்த தி.மு.க. அரசு முன் வரவேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து