முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் மீண்டும் விமானம் விபத்து: குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது

சனிக்கிழமை, 1 பெப்ரவரி 2025      உலகம்
Helicopter --

Source: provided

பிலடெல்பியா : பிலடெல்பியாவில் சிறிய ரக விமானம் குடியிருப்பு பகுதிகளில் விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவின் பிலடெல்ஃபியா நகரில் சிறிய ரக தனியார் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் 6 பேர் இருந்த நிலையில் அவர்களின் நிலை பற்றி உடனடித் தகவல் ஏதும் இல்லை.இந்த விபத்து உள்ளூர் நேரப்படி இரவு 11.30 மணிக்கு நடந்துள்ளது. விமானம் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், பரபரப்பான சாலைகள் நிறைந்த, அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதியில் நொறுங்கி விழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், வானில் திடீரென நெருப்புப் பந்துபோல் விமானம் வெடித்துச் சிதறும் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. விபத்துக்குள்ளான விமானம் வடகிழக்கு பிலடெல்ஃபியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. மிசோரியில் உள்ள ஸ்ப்ரிங்பீல்ட் - ப்ரான்சன் தேசிய விமான நிலையத்துக்கு பயணிக்கவிருந்தது என்று பெடரல் விமான போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் வாஷிங்டனில் நடுவானில் பயணிகள் விமானம்- அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் மோதிக் கொண்டதில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அந்த சோகம் விலகுவதற்குள் பிலடெல்பியாவில் தனியார் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து