எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அமெரிக்கா : அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 87.29 ஆகக் குறைந்துள்ளது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் குறைந்து வருகிறது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு பொருளாதார ரீதியாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். சட்டவிரோத குடியேற்றத்துக்குத் தடை, விசா கட்டுப்பாடு உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளுக்கு வரி விதிப்பை அமலுக்கு கொண்டு வந்துள்ளார். கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவீத வரியும், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரியும் கனடா பொருள்களுக்கு 10 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
டிரம்பின் நடவடிக்கைகளால் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது. இன்று(பிப். 3) அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 67 பைசா சரிந்து 87.29 ஆகக் குறைந்தது. வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணியில் ரூபாய் மதிப்பு 87 ஆகத் தொடங்கிய நிலையில் பின்னர் 87.29 ஆக சரிந்தது. இதனிடையே, கடந்த வார இறுதியில் இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு 5.574 டாலர் பில்லியன் அதிகரித்து 629.557 டாலர் பில்லியனாக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இருப்பினும், தற்போது அந்நியச் செலாவணி இருப்பு 1.888 பில்லியன் டலர் குறைந்து 623.983 பில்லியன் டாலராக உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


