Idhayam Matrimony

உ.பி. மகா கும்பமேளாவில் புனித நீராடிய பூடான் மன்னர்

செவ்வாய்க்கிழமை, 4 பெப்ரவரி 2025      இந்தியா
Bhudan

Source: provided

லக்னோ: உ.பி. பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக் நேற்று புனித நீராடினார்.

உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்நிலையில், பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக்  நேற்று  புனித நீராடினார். புனித நீராடுவதற்கு முன்பு சூரியனுக்கு 'அர்க்யா' சமர்ப்பித்தல் போன்ற சடங்குகளை செய்தார். அவருடன் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மந்திரிகள் சுதந்திர தேவ் சிங் மற்றும் நந்த கோபால் குப்தா ஆகியோரும் புனித நீராடினர்.

முன்னதாக, நேற்று முன்தினம் பூடான் நாட்டிலிருந்து பூடான் நாட்டிலிருந்து லக்னோ விமான நிலையத்துக்கு வருகை தந்த பூடான் அரசர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக்கை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மலர் கொத்து வழங்கி வரவேற்றார். பாரம்பரிய இசை மற்றும் நடனத்துடன் பூடான் அரசருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து