எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன், ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகும் என ஏற்கனவே டிரம்ப் அறிவித்து இருந்த நிலையில் தற்போது அதற்கான அரசாணையை பிறப்பித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்து, டொனால்டு டிரம்ப் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அவர், சமீபத்தில் உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதை தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு அதிக இறக்குமதி வரியை விதித்து வருகிறார்.
அதேபோல ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகும் என டிரம்ப் அறிவித்து இருந்தார். இந்த நிலையில், இந்த அறிவிப்பை நிறைவேற்றும் விதமாக விலகுவதற்கான அரசாணையை டிரம்ப் பிறப்பித்துள்ளார். இதன் மூலம், ஐ.நா. அமைப்புக்கு அமெரிக்கா நிதியுதவி அளிப்பது முழுமையாக நிறுத்தப்படுகிறது
இது குறித்து அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:. இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குப் பிறகு புதிதாக போர்கள் தொடங்குவதைத் தடுப்பதற்கும் சா்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டவும் ஐ.நா.வுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது. ஆனால் அந்த அமைப்பில் சில துணை அமைப்புகள் இந்த அடிப்படை நோக்கத்திலிருந்து தடம் மாறி அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் நலன்களுக்கு எதிராகச் செயல்படுகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவைத் தொடர்ந்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து இஸ்ரேல் விலகுவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து விலகும் ஜனாதிபதி டிரம்பின் முடிவை இஸ்ரேல் வரவேற்கிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் இஸ்ரேலும் இணைந்து கொள்கிறது. மேலும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இஸ்ரேல் பங்கேற்காது என்று அதில் இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி பதிவிட்டிருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


