எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சேலம் : சேலத்தில் மாணவியிடம் சில்மிஷம் செய்த தற்காலிக உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சிக்கனம்பட்டி ஊராட்சி குப்பூரில் அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. 12-ம் வகுப்பு வரை விடுதி வசதியுடன் உள்ள இந்த மாதிரி பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் ஓமலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயதான மாணவி ஒருவர், விடுதியில் தங்கி பிளஸ்-1 படித்து வருகிறார். இந்த பள்ளியில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக ஈரோட்டை சேர்ந்த சிவக்குமார் (வயது 40) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 2-ந் தேதி அந்த மாணவியை பார்த்து அழகாக இருப்பதாக கூறி சில்மிஷம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பற்றி பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலமுருகனிடம் பாதிக்கப்பட்ட மாணவி புகார் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அரசு மாதிரி பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார், பிளஸ்-1 படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததும், சில்மிஷத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியர் மீது ஓமலூர் அனைத்து மகளிர் போலீசில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலமுருகன் புகார் செய்தார்.
இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார். இதேபோல் வேறு எந்த மாணவிக்கும் அவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


