முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல் மீது நடவடிக்கை: சர்வதேச நீதிமன்ற உத்தரவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தடை

வெள்ளிக்கிழமை, 7 பெப்ரவரி 2025      உலகம்
Trump

Source: provided

வாஷிங்டன்: இஸ்ரேல் மீதான விசாரணைகள் தொடர்பாக சர்வதேச கோர்ட்டு மீது தடைகளை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார். 

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போரின் போது மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் நடந்ததாகவும், இந்த குற்றத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்ட் மற்றும் ஹமாஸ் ராணுவ தளபதி முகமது டெய்ப் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறி சர்வதேச குற்றவியல் கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்தது.

இதில் ஹமாஸ் ராணுவ தளபதி முகமது டெய்ப், காசாவில் நடந்த வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது. சர்வதேச கோர்ட்டின் விசாரணையையும் பிடிவாரண்டையும் இஸ்ரேலின் நட்பு நாடான அமெரிக்கா நிராகரிப்பதாக அறிவித்தது.

இந்நிலையில், இஸ்ரேல் மீதான விசாரணைகள் தொடர்பாக சர்வதேச கோர்ட்டு மீது தடைகளை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார். அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

அமெரிக்காவையும் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேலையும் குறிவைத்து சட்டவிரோதமான மற்றும் ஆதாரமற்ற நடவடிக்கைகளை சர்வதேச கோர்ட்டு மேற்கொண்டுள்ளது. நெதன்யாகு மற்றும் அவரது முன்னாள் பாதுகாப்புத்துறை மந்திரிக்கு எதிராக எந்தவித ஆதாரமும் இன்றி கைது வாரண்டுகளை பிறப்பித்தன்மூலம் சர்வதேச கோர்ட்டு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்திருக்கிறது. அமெரிக்கா அல்லது இஸ்ரேல் மீது விசாரணை நடத்த ஐ.சி.சி.க்கு எந்த அதிகார வரம்பும் இல்லை. இரு நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளால் ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சர்வதேச கோர்ட்டின் இந்த விதிமீறல்களுக்கு பொறுப்பானவர்கள் மீது அமெரிக்கா நடவடிக்கைகள் எடுக்கும். அவர்களின் சொத்துக்களை முடக்குவது மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் உறவினர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை போன்ற நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், டிரம்ப் இந்த புதிய உத்தரவில் கையெழுத்திட்டிருக்கிறார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து