எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இலங்கை - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இலங்கை தனது முதல் இன்னிங்சில் 257 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 85 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க், குனமென், நாதன் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 2ம் நாள் முடிவில் 80 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 330 ரன்கள் குவித்துள்ளது. அலெக்ஸ் கேரி 139 ரன்களுடனும், ஸ்டீவ் சுமித் 120 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆசிய மண்ணில் சதம் அடித்த 2-வது ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் என்ற மாபெரும் சாதனையை அலெக்ஸ் கேரி படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஆஸ்திரேலியா தரப்பில் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் மட்டுமே ஆசிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்திருந்தார். தற்போது அலெக்ஸ் கேரி 2-வது விக்கெட் கீப்பராக அந்த சாதனையை படைத்துள்ளார்.
______________________________________________________________________________
அதிக சதங்கள்-சுமித் முதலிடம்
இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் 191 பந்துகளில் சதமடித்தார் ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். முன்னதாக முதல் டெஸ்ட்டிலும் சதமடித்த ஸ்டீவ் ஸ்மித் அதே போட்டியில் 10,000 டெஸ்ட் ரன்களை கடந்திருந்தார். இந்த டெஸ்ட் சதத்துடன் கேப்டனாக இது 17ஆவது சதம். ஆசியாவில் மட்டுமே இது 7ஆவது சதம். கடைசி 5 போட்டிகளில் இது 4ஆவது சதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய அணி 2ம் நாள் முடிவில் 80 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 330 ரன்கள் குவித்துள்ளது. அலெக்ஸ் கேரி 139 ரன்களுடனும், ஸ்டீவ் சுமித் 120 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆசியாவில் அதிக சதங்கள் அடித்த ஆஸி. வீரர்கள் பட்டியலில் ஸ்டீவ் சுமித் முதலிடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன்பு ஆலன் பார்டர் 6, ரிக்கி பாண்டிங் 5 சதங்கள் அடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
______________________________________________________________________________
கனவு போல இருக்கிறது: ராணா
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நாக்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 47.4 ஓவர்களில் 248 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 38.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த மைதானத்தின் பிட்ச் இருதலைப் பட்சமாக இருந்ததாக இந்திய இளம் வீரர் ஹர்ஷித் ராணா கூறியுள்ளார். போட்டி முடிந்த பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, தொடர்ச்சியாக நல்ல லென்த்தில் பவுலிங் செய்வதே எனது முதன்மையான இலக்காகும். ஆரம்பத்தில் அவர்கள் அதிரடியாக விளையாடப் பார்த்தார்கள். அதை நானும், ரோகித்தும் விவாதித்தோம். பிட்ச் இருதலைப் பட்சமாக இருந்தது. அதன் காரணமாக சில பந்துகள் திடீரென நின்று வந்தது. இந்தப் போட்டியில் அறிமுகமானது எனது கனவு வாழ்க்கைப் போல இருக்கிறது. இதற்காக நான் கடினமாக உழைத்துள்ளேன். அந்த உழைப்புக்கான பரிசு தற்போது ஒரு வழியாக எனக்கு வந்து சேர்வதாக உணர்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தங்கம், வெள்ளி விலை சரிவு
02 Mar 2026சென்னை, வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம், வெள்ளி விலை அதிரடியாக குறைந்து விற்பனையானது.
-
ஈரான் - இஸ்ரேல் மோதல்: வான்வெளியை மூடிய ஜோர்டான்
02 Mar 2026அம்மன், மத்தியக் கிழக்கில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக ஜோர்டான் தனது வான்வெளியை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது.
-
தஞ்சையில் நாளை விஜய் பங்கேற்கும் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி
02 Mar 2026தஞ்சாவூர், தஞ்சாவூரில் நாளை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்கும் த.வெ.க.
-
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் வருகிற 23-ம் தேதி தீர்ப்பு
02 Mar 2026மதுரை, சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் வருகிற 23-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பிளஸ் 2 தமிழ் பொதுத்தேர்வில் 10 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை
02 Mar 2026சென்னை, பிளஸ்-2 பொதுத்தேர்வில் நேற்று நடைபெற்ற தமிழ் பொதுத்தேர்வில் 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ் டெல்லி பயணம்: தொகுதி உடன்பாடு கையெழுத்தாக வாய்ப்பு
02 Mar 2026சென்னை, பரபரப்பான அரசியல் சூழலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ் டெல்லி சென்றார்.
-
இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி: ரூ.6 லட்சம் கோடிக்கும் மேல் முதலீட்டாளர்களுக்கு இழப்பு
02 Mar 2026மும்பை, மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்தது.
-
தூத்துக்குடி தீப்பெட்டி குடோனில் தீ விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம்
02 Mar 2026சென்னை, தூத்துக்குடி தீப்பெட்டி குடோனில் தீ விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சமும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு த
-
தேர்வை பதற்றமின்றி எதிர்கொள்ளுங்கள்: மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து
02 Mar 2026சென்னை, பொதுதேர்வு எழுதும் மாணவர்கள் பதற்றமின்றி எதிர்கொள்ளுங்கள் என்று த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.
-
சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.249 கோடி செலவில் சர்வதேச தரத்திலான நிதிநுட்ப கோபுரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
02 Mar 2026சென்னை, சென்னை மாவட்டம் ஆலந்தூர் வட்டம் நந்தம்பாக்கத்தில் ரூ.249 கோடி செலவில் சர்வதேச தரத்திலான நிதிநுட்ப கோபுரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையை நாங்கள் இன்னும் தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன் தகவல்
02 Mar 2026சென்னை, தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடக்கம்: மாணவர்களுக்கு அமைச்சர் வாழ்த்து
02 Mar 2026சென்னை, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
-
உலகளாவிய மோதல்களுக்கு பேச்சுவார்த்தை, தூதரகங்கள் மூலம் தீர்வுகாண பிரதமர் மோடி வலியுறுத்தல்
02 Mar 2026புதுடெல்லி, மத்திய கிழக்கில் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகளாவிய மோதல்களுக்கு பேச்சுவார்த்தை மற்றும் தூதரக முயற்சிகள் மூலம் தீர்வு காணப்படுவதையே இந்தியா ஆதரித்து வ
-
சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு
03 Mar 2026சென்னை, சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.
-
மக்கள் உயிருக்கு உத்தரவாதம் எங்கே? நாங்குநேரி சம்பவத்தில் விஜய் கேள்வி
03 Mar 2026சென்னை, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நேற்றிரவு (நேற்று முன்த


