எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கட்டாக்: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி வெல்லுமா? என்ற ஆவல் ரசிகர்கள் இடையே மேலோங்கும் நிலையல் இன்று கட்டாக்கில் 2-வது போட்டி நடைபெறவுள்ளது.
சுற்றுப்பயணம்....
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4-1என்ற கணக்கில் கைப்பற்றியது. 3 ஒருநாள் போட்டி தொடரில் நாக்பூரில் நடந்த முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
கட்டாக்கில்...
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி ஒடிசா மாநிலம் ம இன்று (9-ம் தேதி) நடக்கிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. வலது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விராட் கோலி முதல் போட்டியில் விளையாடவில்லை. இன்றைய ஆட்டத்துக்கு உடல் தகுதி பெறுவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. கோலி இடத்தில் ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் அரைசதம் அடித்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டார்.
குல் தீப் யாதவ்...
கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் தொடர்ந்து கவலை அளிக்கும் வகையில் உள்ளது. இதே போல கே.எல். ராகுல் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று கருதப்படுகிறது. ஒருவேளை அவர் நீக்கப்பட்டால் ரிஷப்பண்ட் இடம் பெறுவார். ஆல்ரவுண்டர்களான ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா அக்ஷர் படேல் ஆகியோர் தவிர்க்க முடியாத நிலையில் உள்ளனர். தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கிடைத்தால் குல் தீப் யாதவ் நீக்கப்படலாம். வேகப்பந்தில் மாற்றம் இருக்காது.
109-வது போட்டி...
இங்கிலாந்து அணிக்கு இந்தப் போட்டியில் வெற்றி பெறவேண்டிய கட்டாயம் உள்ளது. இதில் தோற்றால் தொடரை இழந்து விடும் ஏற்கனவே அந்த அணி 20 ஓவர் தொடரை இழந்து விட்டது. இதனால் அந்த அணி வீரர்கள் வெற்றிக்காக முழு திறமையை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் இன்று மோதுவது 109-வது ஒரு நாள் போட்டியாகும். இதுவரை நடந்த 108 ஆட்டத்தில் இந்தியா 59-ல், இங்கிலாந்து 44-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் டை ஆனது. 3 போட்டி முடிவு இல்லை. பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்) , ஜெய்ஸ் வால், வீராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல். ராகுல், ரிஷப்பண்ட், ஹர் திக் பாண்ட்யா, அக் ஷர் படேல், ஜடேஜா, குல்தீப் யாதவ் , ஹர்சித் ராணா, முகமது ஷமி, அர்ஷ் தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர்.
இங்கிலாந்து:
ஜோஸ் பட்லர் (கேப்டன்), பில் சால்ட், பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி புரூக், லிவிங்ஸ் டன், ஜேக்கப் பெதல், பிரைடன் கார்ஸ், ஆதில் ரஷீத், ஜோப்ரா ஆர்ச்சர், சகீப் மக்மூத், ஜேமி சுமித், ஒவர்டன், ரேகான் அகமது, அட்கின்சன், மார்க் வுட்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய


