முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் காங்கிரஸ் கட்சியை 4-ம் இடத்திற்கு தள்ளிய ஒவைசி

ஞாயிற்றுக்கிழமை, 9 பெப்ரவரி 2025      அரசியல்
Owaisi 2023-09-17

புதுடில்லி, டெல்லியில் ஒவைசியின் கட்சி  தான் போட்டியிட்ட 2 தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்தை பிடித்துள்ளது.   

டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின.  டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களில் வெற்றி பெற்று பா.ஜ.க.  ஆட்சியை பிடித்துள்ளது. 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆம் ஆத்மியை ஆட்சியை இழந்துள்ளது.

டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நிலை மீண்டும் பரிதாபத்துக்குரியதாக மாறி இருக்கிறது. டெல்லியில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 3-வது முறையாக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. கடந்த 2 தேர்தல்களிலும் (2015, 2020) காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஒவைசியின் கட்சி டெல்லியில் முஸ்லிம்கள் அதிகமாக உள்ள 2 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டது. அந்த 2 தொகுதிகளிலும் காங்கிரசை பின்னுக்கு தள்ளி ஒவைசி கட்சி வேட்பாளர்கள் 3-ம் இடத்தை பிடித்துள்ளனர். ஓக்லா மற்றும் முஸ்தபாபாத் என்ற 2 தொகுதிகளில் ஒவைசி கட்சி போட்டியிட்டது. ஓக்லா தொகுதியில் ஆம் ஆத்மியும் முஸ்தபாபாத் தொகுதியில் பா.ஜ.க. வும் வெற்றி பெற்றது.

ஓக்லா தொகுதியில் பா.ஜ.க.  வேட்பாளரை விட 23639 வாக்குகள் அதிகம் பெற்று ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் ஒவைசி கட்சி  வேட்பாளர் 39558 வாக்குகள் பெற்று 3-ம் இடமும் காங்கிரஸ் வேட்பாளர் 12739 வாக்குகள் பெற்று 4-ம் இடமும் பிடித்தார்.

முஸ்தபாபாத் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளரை விட 17578 வாக்குகள் அதிகம் பெற்று பா.ஜ.க.  வேட்பாளர் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் ஒவைசி கட்சி  வேட்பாளர் 33474 வாக்குகள் பெற்று 3-ம் இடமும் காங்கிரஸ் வேட்பாளர் 11763 வாக்குகள் பெற்று 4-ம் இடமும் பிடித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து