முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு மருத்துவமனை ஊழியர்களுடன் நடிகர் கஞ்சா கருப்பு வாக்குவாதம்

செவ்வாய்க்கிழமை, 11 பெப்ரவரி 2025      தமிழகம்
Kanja-Karuppu

Source: provided

சென்னை: போரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்ற நடிகர் கஞ்சா கருப்பு மருத்துவமனையில் உள்ள ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

நடிகர் கஞ்சா கருப்பு தமிழ் சினிமாவில் பிதாமகன் படத்தின் மூலம் ரசிகர்களால் அறியப்பட்டவர். அதை தொடர்ந்து இவர் ராம், சிவகாசி, சண்டக்கோழி, பருத்திவீரன், தெனாவட்டு, நாடோடிகள் என பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றவர்.

இந்த நிலையில், நடிகர் கஞ்சா கருப்பு சென்னை போரூர் அரசு மருத்துவமனைக்கு கால் வலி காரணமாக சிகிச்சை பெற சென்றுள்ளார். அங்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் யாரும் இல்லாததால் அவரை நீண்ட நேரமாக காக்க வைத்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மூதாட்டி ஒருவர் அங்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். மேலும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவரும் சிகிச்சை பெற வந்துள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க யாரும் இல்லாததால் கஞ்சா கருப்பு மருத்துவமனையில் உள்ள ஊழியர்களுடன் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருடன் சேர்ந்து அங்கிருந்த நோயாளிகளும் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீர் போராட்டம் காரணமாக மருத்துவமனையில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

இதுகுறித்து நடிகர் கஞ்சா கருப்பு கூறியதாவது, "லட்சக்கணக்கில் சம்பளம் பெற்றுக் கொண்டு மருத்துவர்கள் அரசு மருத்துவமனையை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். காலை 8 மணிக்கு வர வேண்டியவர்கள் மதியம் 3 மணிக்குத்தான் வருகிறார்கள். உயிருக்கு போராடும் நிலையில் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க இங்கு யாருமே இல்லை. இது வேதனையை அளிக்கிறது" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து