முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிப்பூரில் 5 பயங்கரவாதிகள் கைது

வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2025      இந்தியா
Manipur 2023 06 06

Source: provided

இம்பால் : மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த 5 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.

மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதத்தில் மெய்தி மற்றும் குகி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 240 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். ஏறக்குறைய 20 மாதங்களாக இந்த பகுதியில் இரு குழுவினருக்கும் இடையே மோதல்கள் நடைபெறுவதும், பின்னர் அமைதி ஏற்படுவதும் காணப்படுகிறது.

இந்நிலையில், மணிப்பூரின் இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு மற்றும் தவுபல் மாவட்டங்களில் இருந்து தடைசெய்யப்பட்ட அமைப்புகளை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இம்பால் மேற்கில் உள்ள தங்மைபந்த் மற்றும் கெய்சாம்பட்டில் இருந்து தடைசெய்யப்பட்ட காங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 2 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர். அதேபோல இம்பால் கிழக்கில் உள்ள குராய் தவுடம் லெய்காயில் இருந்து கேசிபியின் மற்றொரு உறுப்பினரை போலீசார் கைது செய்தனர். மற்றொரு நடவடிக்கையில், தவுபல் மாவட்டத்தில் இருந்து 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து