முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட் ரயில் நிலையத்திலும் கூட்ட நெரிசல்: பக்தர்கள் மயக்கம்

திங்கட்கிழமை, 17 பெப்ரவரி 2025      இந்தியா
Train 2023-04-06

 ராஞ்சி, ஜார்க்கண்ட் தலைநகரில் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலால் பயணிகள் மயக்கமடைந்தனர்.

கும்பமேளாவையொட்டி பிரயாக்ராஜுக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ரயில் நிலையங்களில் பக்தர்கள் அதிகளவில் திரண்டு வருவதால் கூட்ட நெரிசல் ஏற்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.

புது டில்லி ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 18 பேர் சனிக்கிழமை இரவு பலியாகினர். இந்த அசம்பாவிதம் நாடெங்கிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரயில் நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை ரயில்வே துறை எடுத்து வருகிறது.

இதனிடையே, ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சி ரயில் நிலையத்தில் பிரயாக்ராஜுக்கு செல்ல ஞாயிற்றுக்கிழமை(பிப். 16) பயணிகள் அதிகமானோர் திரண்டிருந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன்காரணமாக, பயணிகள் சிலர் மயக்கமடைந்து விழுந்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கமடைந்த 5 பயணிகளுக்கும் மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் உடல்நிலை சீரானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஞ்சியிலிருந்து டில்லிக்கும் உத்தரப் பிரதேசத்துக்கும் செல்ல அதிகமான பயணிகள் ராஞ்சி ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 16) மாலை திரண்டிருந்தனர். அப்போது ஜார்க்கண்ட் சுவர்ண ஜெயந்தி எக்ஸ்பிரஸ் (12817) ரயில் அங்கு வந்தடைந்தது. அதில் ஏற்கெனவே பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.  இந்த நிலையில், ராஞ்சி ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகளும் அந்த ரயிலில் ஏற முற்பட்டபோது, டிக்கெட் எடுக்காமல் அந்த ரயிலில் ஏறிக்கொண்ட பயணிகள் சிலர் பெட்டிகளின் கதவுகளை மூடியதுடன் திறக்க முடியாதபடி பூட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இன்னொருபுறம், டிக்கெட் எடுத்துக்கொண்டு ரயிலில் ஏற காத்திருந்த பயனிகளுக்கு இது பெரும் தலைவலியாக உருவெடுத்தது. அவர்களால் அந்த ரயில் பெட்டிகளில் ஏற முடியவில்லை. இந்த பரபரப்பான சூழலில், ஒருசில குடும்பங்களில், சிலர் ரயிலில் ஏறிவிட்டனர் எனினும், பிறர் ஏற முடியாமல் தவித்தனர். ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் ரயில் கதவுகளை திறக்க முயற்சிப்பதற்குள் ரயில் புறப்படத் தயாரானது. நல்வாய்ப்பாக எவ்வித உயிர்சேதமும் காயமோ யாருக்கும் ஏற்படவில்லை.

இதனையடுத்து, ரயிலில் ஏற்கெனவே உள்ள பயணிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து டிக்கெட்டுகள் வழங்குமாறு ரயில் நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து