முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசைக் கண்டித்து இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க கம்யூ. அழைப்பு

திங்கட்கிழமை, 17 பெப்ரவரி 2025      தமிழகம்
Mutharasan

சென்னை,  மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து இன்று இண்டியா கூட்டணி சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள் திரளாக பங்கேற்க வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் தமிழகத்துக்கான நிதியை வழங்குவோம் என நிபந்தனை விதிப்பதையும், தமிழகத்தையும், மக்களையும் வஞ்சித்து வரும் மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து இன்று மாலை 4 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இண்டியா கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், வர்க்க, வெகுமக்கள் அமைப்புகளை சேர்ந்தவர்கள், இளைஞர், மாணவர், மாதர் என அனைவரும் அணி, அணியாக திரண்டு வந்து கலந்து கொள்ள வேண்டும், என்று அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து