எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சேலம் பதிவு மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட காடையாம்பட்டி சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிருஷ்ணகிரி பதிவு மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட பாகலூர் சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றை சென்னை தலைமை செயலகத்தில் காணொளி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பதிவுத்துறை வாயிலாக மக்கள் தங்கள் சொத்துக்களின் மீதான உரிமையை தமது பெயரில் பதிவு செய்தல், திருமணத்தைப் பதிவு செய்தல், சங்கங்கள், சீட்டுகள் மற்றும் கூட்டாண்மை நிறுவனம் போன்ற குழுவாகக் கூடி செயல்படும் நடவடிக்கைகளைப் பதிவு செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பதிவுத்துறை செயல்பாடுகளை மேலும் மேம்படுத்தும் வகையில் புதிய சார்பதிவாளர் அலுவலகங்களை கட்டுதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல், புதிய சார்பதிவாளர் அலுவலகங்களை ஏற்படுத்துதல், துறையின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தில், துறைவாரியான பணிகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டதன் அடிப்படையில், சேலம் வருவாய் மாவட்டம், காடையாம்பட்டி வட்டத்தில் அமையும் சேலம் (மேற்கு) பதிவு மாவட்டம் ஓமலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள 20 கிராமங்கள், மேச்சேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள 4 கிராமங்கள் மற்றும் தருமபுரி பதிவு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள 2 கிராமங்கள் ஆகியவற்றினை அச்சார்பதிவாளர் அலுவலகங்களிலிருந்து பிரித்து மொத்தம் 26 கிராமங்களை உள்ளடக்கி சேலம் (மேற்கு) பதிவு மாவட்டத்தில் புதியதாக காடையாம்பட்டி சார்பதிவாளர் அலுவலகம் உருவாக்கப்பட்டு, முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.
புதியதாக உருவாக்கப்பட்ட காடையாம்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் சராசரியாக ஆண்டொன்றிற்கு 4978 ஆவணங்கள் பதிவாகி சுமார் 10 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிருஷ்ணகிரி பதிவு மாவட்டத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட பாகலூர் சார்பதிவாளர் அலுவலகம் 2024-2025-ஆம் ஆண்டிற்கான பதிவுத்துறை மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில், கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டம், ஓசூர் மற்றும் சூளகிரி வருவாய் வட்டங்களில் அமையும் கிருஷ்ணகிரி பதிவு மாவட்டம், ஓசூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள 52 கிராமங்கள் மற்றும் சூளகிரி சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள 15 கிராமங்கள் ஆகியவற்றினை அச்சார்பதிவாளர் அலுவலகங்களிலிருந்து பிரித்து மொத்தம் 67 கிராமங்களை உள்ளடக்கி கிருஷ்ணகிரி பதிவு மாவட்டத்தில் புதியதாக பாகலூர் சார்பதிவாளர் அலுவலகம் உருவாக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது.
புதியதாக உருவாக்கப்பட்ட பாகலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சராசரியாக ஆண்டொன்றிற்கு 8100 ஆவணங்கள் பதிவாகி சுமார் 54 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள் திறக்கப்படுவதன் மூலம் பொதுமக்களுக்கு விரைவான மற்றும் சிறப்பான சேவைகளை அளிக்க இயலும். இந்த நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்.பி.மூர்த்தி, தலைமைச் செயலாளர் .நா.முருகானந்தம், வணிகவரி மற்றும் பதிவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் .குமார் ஜயந்த்., பதிவுத்துறை தலைவர் .தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


