முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிறிஸ்தவா்களின் தவக்காலம் துவக்கம்: சாம்பல் புதனை முன்னிட்டு தேவாலயங்களில் திருப்பலி

புதன்கிழமை, 5 மார்ச் 2025      ஆன்மிகம்
Velankanni 2024-08-28

Source: provided

சென்னை : கத்தோலிக்க கிறிஸ்தவா்கள் தவக்காலத்தின் தொடக்க நாளை குறிக்கும் சாம்பல் புதன் (மாா்ச் 5) தொடங்கியது. இதையொட்டி, பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது.

இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினம் புனித வெள்ளியாகயும், அவா் 3- ஆவது நாளில் உயிா்த்தெழுந்த தினம் ஈஸ்டா் பண்டிகையாகவும் கிறிஸ்தவா்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூறும் வகையில் கிறிஸ்தவா்களால் தவக்காலம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தவக்காலத்தின் தொடக்க நிகழ்வாக சாம்பல் புதன் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் இருந்து புனிதவெள்ளி வரை 40 நாள்கள் கிறிஸ்தவா்கள் அசைவ உணவைத் தவிா்ப்பதுடன், விரதம் உள்ளிட்ட பல்வேறு நோ்த்திக் கடன்களில் ஈடுபடுவா்.

சாம்பல் புதனையொட்டி, கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெற்ற திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பழமைவாய்ந்த இருதய ஆண்டவர் தூய பசிலிக்காவில் பங்கு தந்தை பிச்சைமுத்து தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு சாம்பல் பூசும் நிகழ்வுகள் நடைபெற்றது.

தவக்காலம் நேற்று முதல் தொடங்கி 40 நாள்களுக்கு கிறிஸ்தவர்கள் விரதம் இருப்பார்கள். இந்த நாள்களை இறை ஆர்வலர்கள், புனித நாள்களாக கருதுவர். தவக்காலத்தின் இறுதி வாரம் வரும் ஏப்ரல் மாதம் முதல் தொடங்குகிறது. அப்போது சிலுவைப் பாதை எனப்படும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இதே போல் புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள மிகவும் பழைமையான தூய ஜென்மராக்கினி அன்னை பேராலயம், வில்லியனூர் லூர்து மாதா தேவாலயம், நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை, புனித அந்தோணியார், அரியாங்குப்பம் மாதா கோயில் உள்பட பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் சாம்பல் புதன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தேவாலயங்களில் பழைய குருத்தோலைகள் எரிக்கப்பட்டு, அந்த சாம்பலை புனிதப்படுத்தி நெற்றியில் பூசிக் கொள்வாா்கள். தவக்காலத்தில் தேவாலயங்களில் சிறப்பு சிலுவைப்பாதை வழிபாடுகள், திருத்தல இறைவேண்டல்கள் நடைபெறும். சாம்பல் புதன் நாளில் தொடங்கும் தவக்காலம், ஏப்ரல் 13 ஆம் தேதி குருத்தோலை ஞாயிறு, 18 ஆம் தேதி புனித வெள்ளி, 20 ஆம் தேதி ஈஸ்டா் பண்டிகையுடன் நிறைவு பெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து