முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டில் அடுத்த 20 ஆண்டுகளில் 30 ஆயிரம் விமானிகள் தேவை: மத்திய அமைச்சர் தகவல்

புதன்கிழமை, 12 மார்ச் 2025      இந்தியா
Air

புதுடெல்லி, இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகளில் 30 ஆயிரம் விமானிகள் தேவை என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் சக்தி குழுமம் மற்றும் ஆஸ்திரியாவின் டைமன்ட் விமான நிறுவனங்களின் கூட்டு அமைப்பான சக்தி விமான நிறுவனம் சார்பில் 200 பயிற்சி விமானங்களை வாங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சி புது டெல்லியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் விமானப் போக்குவரத்துத் துறை மந்திரி ராம்மோகன் நாயுடு பேசியதாவது:-

இந்தியாவில் தற்போது 800-க்கும் அதிகமான உள்நாட்டு விமானங்கள் இயங்கி வரும் நிலையில், மேலும் 1,700 விமானங்களை வாங்குவதற்கான நடவடிக்கையை விமான நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. இதனால், விமானத் துறை மிகப் பெரிய அளவில் விரிவடைய உள்ளது. ஆனால், தற்போது இந்தியாவில் 6,000 முதல் 7,000 விமானிகள் மட்டுமே உள்ளனர். எனவே, அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில் இந்தியாவில் 30,000 உள்நாட்டு விமானிகள் தேவைப்படுவர். உலகின் வேகமாக வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்து சந்தையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்ந்து வருகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து