எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் (73) நேற்று காலை வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீர் நெஞ்சு வலி காரணமாக மார்ச் 9-ஆம் தேதி நள்ளிரவு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜகதீப் தன்கர் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தேவையான சிகிச்சையை மருத்துவக் குழுவினர் அளித்தனர்.
இந்த நிலையில், ஜகதீப் தன்கருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதால் அவர் நேற்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்றும் எய்ம்ஸ் மருத்துவக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், அடுத்த சில நாள்கள் ஜகதீப் தன்கர் ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜகதீப் தன்கரின் உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


