எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்கள் கனகசபையில் நின்று தரிசனம் செய்வதை தடுத்த தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த ஆருத்ரா தரிசனத்தின்போது பக்தர்கள் கனகசபையில் நின்று தரிசனம் செய்ய அறநிலையத் துறை அனுமதி வழங்கியது. ஆனால், அந்த உத்தரவை மீறி பக்தர்களை கனகசபையில் நின்று தரிசனம் செய்ய விடாமல் தடுத்ததாக சில தீட்சிதர்கள் மீது சிதம்பரம் தில்லையம்மன் கோயில் செயல் அலுவலரான சரண்யா காவல்துறையில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின்படி பொது ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பட்டு என்பவர் உள்ளிட்ட 6 தீட்சிதர்கள் மீது சிதம்பரம் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பட்டு உள்ளிட்ட 6 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர் கோபி, “இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருவதால் வழக்கை ரத்து செய்யக் கூடாது” என ஆட்சேபம் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து தீட்சிதர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


