முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்துணவு ஊழியா்களின் தணிக்கை தொகை ரூ.257 கோடி தள்ளுபடி: தமிழக அரசு உத்தரவு

வியாழக்கிழமை, 13 மார்ச் 2025      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, சத்துணவு மைய ஊழியா்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட வேண்டிய ரூ.257.83 கோடிக்கான தணிக்கைகளை முழுமையாகத் தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  

அரசுத் துறைகளின் செயல்பாடுகள் அனைத்தும் தணிக்கைத் துறையால் ஆண்டுதோறும் தணிக்கை செய்யப்படும். மற்ற அனைத்துத் துறைகளிலும் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சத்துணவு மையங்களில் மட்டும் 32 ஆண்டுகளாகத் தணிக்கை மேற்கொள்ளப்படாமல் இருந்தது. இதற்கு போதிய ஆவணங்கள் இல்லாததே காரணமாகும்.

இதையடுத்து, அவற்றை ரத்து செய்வதற்கான உத்தரவை சமூக நலத் துறைச் செயலா் ஜெயஸ்ரீ முரளிதரன் பிறப்பித்துள்ளாா். அவரது உத்தரவு விவரம்:

2005-ஆம் ஆண்டுக்கு முன்பு, சத்துணவு அமைப்பாளா் பணி என்பது பகுதி நேரப் பணியாக இருந்தது. இதனால், அவா்கள் பணிபுரிந்த மையத்தில் ஆவணங்களைப் பராமரிக்கத் தவறிவிட்டனா். சிலா் பணியில் இருந்து எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் விலகிச் சென்றனா். இதனால், தணிக்கைக்கு ஆவணங்கள் கிடைக்காத நிலை உள்ளது. இதையடுத்து, 32 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள தணிக்கைத் தடைகளை தள்ளுபடி செய்ய எந்தவித ஆட்சேபணையும் இல்லை என்று தலைமைத் தணிக்கை இயக்குநரிடம் இருந்து தடையில்லாச் சான்று பெறப்பட்டுள்ளது. இதனால், அனைத்து மாவட்டங்களிலும் இயங்கும் சத்துணவு மையங்களில் கடந்த 32 ஆண்டுகள் வரை எழுப்பப்பட்டு, நிலுவையில் உள்ள தணிக்கைத் தடைகளுக்கு முழுமையாக விலக்களித்து தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, நீதிமன்ற வழக்குகள் தொடா்பான விவகாரங்களைத் தவிா்த்து நிலுவையிலுள்ள தணிக்கைத் தடைகள் ரத்து செய்யப்படுகின்றன என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 32 ஆண்டுகளில் தணிக்கைகள் வழியாகப் பிடித்தம் செய்யப்பட வேண்டிய தொகை மொத்தமாக ரூ.257 கோடியே 83 லட்சத்து 10 ஆயிரத்து 289-ஆக இருந்தது. தொகை பிடித்தம் செய்யப்பட தேவையில்லாத தணிக்கை விவரங்களாக 25,588 உள்ளன என்று அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவு காரணமாக, பிடித்தம் செய்யப்பட வேண்டிய தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து